Connect with us

காதல் கணவனை அடுத்து நயன் பொழப்புலயும் விழுந்த பேரிடி.. இதென்னப்பா புதுப் பிரச்சினை?..

nayan

Cinema News

காதல் கணவனை அடுத்து நயன் பொழப்புலயும் விழுந்த பேரிடி.. இதென்னப்பா புதுப் பிரச்சினை?..

நட்சத்திர தம்பதிகளாக சில நாள்கள் ஜொலித்தவர்கள் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன். இவர்கள் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்து இவர்களும் தங்கள் திருமண வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக சில நாள்கள் கொண்டாடித் தீர்த்தனர்.தேனிலவு எல்லாம் சென்று அம்மணி ஜவான் படத்தின் படப்பிடிப்பிற்கும் சென்றார்.

nayan1

nayan1

இந்தப் பக்கம் விக்னேஷ் சிவன் தன் பட வேலைகளுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார். திருமணம் முடிந்து
முதன் முதலாக பெரிய ஆஃபராக வந்த படம் ஏகே 62 படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஸ்கிரிப்ட் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் லைக்கா நிறுவனமும் அஜித் தரப்பும் மிகுந்த வருத்தத்துடன் இருந்ததால் இந்த வாய்ப்பு அப்படியே டிராப் ஆனது.

இந்தப் பிரச்சினையில் விக்னேஷ் சிவன் சில நாள்கள் மிகுந்த சோகத்தில் இருந்தார் மேலும் தன் அடுத்தக்கட்ட பணிகளில் ஆயத்தமாகிவிட்டார். விக்னேஷ் சிவனுக்கு இப்படி ஒரு பிரச்சினை என்றால் மறுபக்கம் நயன் தரப்பிலும் சில பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. ‘குரங்குபொம்மை’ இயக்குனர் நித்திலன் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ‘மகாராஜா’ என்ற தலைப்பில் ஒரு படம் பண்ணப் போகிறாராம்.

nayan2

nayan2

ஆனால் இதற்கு முன்னாடி நித்திலன் நயனை வைத்து தான் படம் பண்ணுவதாக இருந்ததாம். ரமேஷ் பிள்ளை தயாரிப்பில் இரண்டு படங்கள் நயனை வைத்து பண்ணுவதாக அக்ரிமெண்ட் கூட கையெழுத்தாகிவிட்டதாம். தலா 10 கோடி வீதம் இரண்டு படங்களுக்கு 20 கோடி என அட்வான்ஸ் தொகையையும் நயன் பெற்றுக் கொண்டாராம்.

இதையும் படிங்க : முதல் படமே ஃப்ளாப்… எப்படியாவது வாய்ப்பு வாங்கி கொடுங்களேன்… புலம்பித் தள்ளிய ரஜினி பட இயக்குனர்… இவரா இப்படி!

ஆனால் கிட்டத்தட்ட 2 வருடங்களாக நயன் தரப்பில் எந்த ஒரு செய்தியும் தெரியாததால் அவரிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகை திரும்ப பெறப்பட்டதாம். இதே போல் மற்றுமொரு தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவும் நயனை வைத்து ஏற்கெனவே படம் பண்ணப் போகிறார் அதற்கான அவரும் நயனுக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்தாராம். அப்பொழுதும் நயன் இழுத்தடிக்க எஸ்.ஆர்.பிரபுவும் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டாராம். இதனால் தயாரிப்பாளர்கள் மத்தியில் நயன் மீது இருக்கும் நல்ல பேர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதாம்.

nayan3

nayan3

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top