இத பாத்து சொல்லுங்க!. நான்தான நம்பர் ஒன்!. புடவையில் அசர வைக்கும் நயன்தாரா!...
கேரளாவை சேர்ந்த நயன்தாரா ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். சில வருடங்கள் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், பில்லா, ராஜா ராணி உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.
ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு, விக்ரம், சூர்யா, விஷால் என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க துவங்கினார்கள். ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள மாயா, அறம், நானும் ரவுடிதான், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்தார்.
இதனால் கதாநாயகன் இல்லாமே நயன்தாராவை மட்டுமே வைத்து திரைப்படங்கள் உருவாக துவங்கியது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்டு வாடகைத் தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக மாறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ரூ.10 கோடி சம்பளம் கேட்கும் நடிகையாக மாறி இருக்கிறார். ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்ததன் மூலம் ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டார். இந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது.
அவ்வப்போது விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்வதையும், குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதையும் புகைப்படங்களாக பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை அவர் வாங்கினார். இந்நிலையில், அப்போது புடவை அணிந்து கொண்டு வந்த நயன்தாரா போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.