பூகம்பத்தை ஏற்படுத்திய நயனின் இன்ஸ்டா பதிவு! சும்மாவே பத்திக்கிட்டு எரியுது.. இது வேறயா?

nayan
Actress Nayanthara: தமிழ் சினிமாவில் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் , தெலுங்கு , ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் நயன் இப்போது தன் குழந்தைகளுடன் பொழுதை கழித்துக் கொண்டு வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நயன் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் அவரை கரம் பிடித்தார்.
அதோடு இரு ஆண் குழந்தைகளுக்கும் தாயாக இருந்து வருகிறார். சினிமா போக தன் குழந்தைகளுடன் விளையாடுவது கொஞ்சுவது என முழு நேரத்தையும் அவர்களுக்காகவே செலவழித்து வருகிறார். விக்னேஷ் சிவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் ஒரு படத்தை இயக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரெங்கநாதனை வைத்து எல்.ஐ.சி என்ற பெயரில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: அச்சச்சோ!.. ஜிப்பு போட மறந்த தனுஷ் ஹீரோயின்!.. வெளியே தெரிந்த உள்ளாடை!.. ஜூம் பண்ணும் ஃபேன்ஸ்!..
படத்தின் படப்பிடிப்பு வெளியூர்களில் மும்முரமாக நடந்துவருகிறது. இதற்கிடையில் திடீரென நயனும் விக்னேஷ் சிவனும் விவாகரத்து செய்ய இருப்பதாக சில செய்திகள் வைரலானது. அதற்கு காரணம் நயன் தன் இணைய தள பக்கத்தில் இருந்து திடீரென விக்கியின் பக்கத்தை துண்டித்துவிட்டதாக பரவியது. ஆனால் அது ஏதோ டெக்னிக்கல் தவறு என மீண்டும் விக்கியின் பக்கத்தை ஃபாலோ செய்ய தொடங்கினார்.
இதிலிருந்தே அவர்களை பற்றி அந்த விவாகரத்து செய்தி தொடர் சர்ச்சையாக மாறி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவனும் சமீபத்தில் தனது இணையதள பக்கத்தில் நயனுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து எங்களுக்குள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என மறைமுகமாக தெரிவித்திருந்தார்.

nayan
இதையும் படிங்க: வேறலெவல் மிரட்டலா இருக்கே.. சச்சின் பந்து போட சூர்யா பேட் ஆடுறாரே!.. இது எப்போ நடந்துச்சு!..
இந்த நிலையில் நயன் இன்று தன் இன்ஸ்டா ஸ்டோரியில் திடீரென ஒரு பதிவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார். அந்த பதிவில் i'm lost என பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள்
எது அவரை விட்டு போய்விட்டது என தெரியவில்லையே என புலம்பி வருகிறார்கள்.