புருஷனோடுதான் சூட்டிங் வரவேண்டி இருக்கு... குமுறும் நடிகை... இதுக்கு ஒரு எண்டே இல்லையா...!

by sankaran v |   ( Updated:2024-08-16 12:51:41  )
Neelu
X

Neelu

தமிழ்சினிமாவில் முன்பெல்லாம் அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி நிறைய பேர் வெளியே சொல்லக்கூடாது. அப்போது தான் வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சி உள்ளுக்குள்ளேயே வைத்து சிக்கித் தவித்து வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் நடிகைகள் துணிச்சலாக பேட்டி கொடுத்து விடுகிறார்கள். அப்படி பலரையும் நாம் பத்திரிகை செய்திகளில் படித்திருப்போம். அந்த வகையில் இப்போது ஒரு நடிகை ஓபன் டாக் கொடுத்துள்ளார். அவர் என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

ஜீவா நடித்த படம் சிங்கம்புலி. இதுல ஜீவா பிளேபாய் மாதிரி ஒரு ரோலில் நடித்து இருப்பார். இந்தப் படத்தில் நடித்தவர் தான் நடிகை நீலு நஸ்ரின். அதுல ஒரு காட்சியில் கவர்ச்சி விருந்து படைத்திருப்பார். அதன்பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் இப்படி சொல்லி இருக்கிறார். அந்தப் படத்தில் எனக்கு அதுமாதிரியான காட்சிகள் உண்டுன்னு சொல்லவே இல்லை. ஆனா சூட்டிங் முடிஞ்சதும் அப்படியே மாற்றி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Singampuli

Singampuli

சமீபத்தில் இவர் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அதாவது சினிமாவில் சாதாரண பெண்களுக்கு நிறைய தொந்தரவு வருது. இதை நான் பார்த்திருக்கேன். அதனால தான் சூட்டிங் வரும்போது எப்பவும் கணவரையும் அழைச்சிட்டு வருவேன். அதனால எனக்கு அந்த மாதிரியான தொந்தரவுகள் வராதுன்னும் அதுல சொல்லிருக்காங்க அம்மணி.

aunty

இவர் சொல்றதைப் பார்க்கும்போது சினிமாவையும் அட்ஜெஸ்ட்மெண்டையும் பிரிக்கவே முடியாதா? இதுக்கு ஒரு எண்டே கிடையாதான்னு தான் தோணுது. நீலுவோட பேட்டியும் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.

2011ல் சாய் ரமணி இயக்கத்தில் வெளியான படம் சிங்கம்புலி. மணிசர்மாவின் இசையில் ஜீவா, ரம்யா, ஹனிரோஸ், சந்தானம் என பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தான் நீலுவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story