வாயோடு வாய்.. எப்படியெல்லாம் ஊட்டி விடுறாரு? வீடியோவை வெளியிட்டு மஜா பண்ணும் நிக்கிகல்ரானி

by Rohini |   ( Updated:2024-01-21 02:18:07  )
nikki
X

nikki

Actress Nikki kalrani: தமிழ் சினிமாவில் அனைவருக்கும் ஃபேவரைட்டான நடிகையாக வலம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. டார்லிங், சார்லி சாப்ளின் 2, ஹரஹர மகாதேவகி போன்ற படங்களில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நிக்கி கல்ராணி.

மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க போன்ற படங்களில் இருவரும் சேர்ந்து நடித்ததன் மூலம் காதல் வலையில் வீழ்ந்த இவர்கள் பின் 7 வருடங்கள் கழித்து திருமணத்தில் ஒன்றிணைந்தார்கள். இவர்கள் திருமணம் அனைவர் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இதையும் படிங்க: அவன் இறந்தப்போ இதுதான் ஹெல்ப் பண்ணுச்சு!.. ‘நாதஸ்வரம்’ சீரியல் நடிகையின் தற்போதைய நிலை

திருமணமாகி இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில் நிக்கி கல்ராணியை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. ஆனால் ஆதி அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஆதியும் நிக்கியும் சேர்ந்து பல வீடியோக்கள் , புகைப்படங்களை இணையத்தில் கசிய விட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதியும் நிக்கியும் காரில் வந்து ரோட்டோரம் இருக்கிறவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான உடைமைகள், உணவுகள் வழங்கி நிறைய உதவிகளை செய்தனர்.

இதையும் படிங்க: வடிவேலு இல்ல.. பொடிவேலு!.. இவ்ளோ வன்மம் இருக்க கூடாது.. பொளந்து கட்டிய இயக்குனர்

இந்த நிலையில் நிக்கி கல்ராணி தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு குழந்தைக்கு ஸ்னேக்ஸ் ஊட்டி விடும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நிக்கி கல்ராணி தன் வாயில் இருந்து அந்த குழந்தையின் வாய்க்கே நேரடியாக ஊட்டி விடுவதை போல் அந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அது பார்க்கும் போதே மிகவும் க்யூட்டாக இருக்கின்றது.

இதோ அந்த வீடியோ லிங்க் : https://www.instagram.com/reel/C2Wey87p6jG/?utm_source=ig_web_copy_link

Next Story