Connect with us
oorvasi

Cinema News

மலையாள சினிமாவுல மட்டும் தான் அது நடக்குதா? ஊர்வசி சொல்லும் அந்தக் காரணம்!

மலையாள சினிமா உலகில் தற்போது பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.  நடிகர் சங்க நிர்வாகிகள் எல்லோரும் கூண்டோடு கலைந்து விட்டனர். இந்த நிலையில் நடிகை ஊர்வசியும் இது சார்ந்த சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

நான் வளர்ந்தது எல்லாம் சென்னை தான். குறுகிய காலம் குழந்தைப் பருவம் தான் கேரளாவில் இருந்தது என்று சொல்கிறார் நடிகை ஊர்வசி. வேறு என்னன்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

இந்தியாவிலேயே அதிகமான பாலியல் தொந்தரவுகள் கேரளா சினிமாவுல தான் இருக்குன்னு சொல்றதுக்கு என்ன காரணம்னு நிருபர் கேட்கிறார். அதற்கு பிரபல நடிகை ஊர்வசி அளித்த பதில் இதுதான்.

Also read: விஜய் படத்தின் சிடி-ஐ உடைத்து போட்ட கவின்!. சினிமா மேல் அவ்வளவு லவ்வா!..

நிச்சயமா கேரளாவுல இல்லை. மீடியாவுல பார்க்கக்கூடிய விஷயங்களில் வட இந்தியாவில் நடக்குறது எல்லாம் கேரளாவுல நடக்கலை. பெண்களும், ஆண்களும் எங்கெல்லாம் சேர்ந்து வேலை செய்றோமோ அங்கு நடக்கக்கூடிய விஷயம் தான். மற்ற இடங்களில் அப்படி குற்றச்சாட்டுகளைச் சொல்றதுக்கு யாரும் முன்வரல. கேரளாவில் அப்படி நடிகைகள் தைரியமாக சொல்ல முன்வந்து இருக்கிறார்கள்.

நான் தமிழ்ல இருந்து தான் சினிமாவை ஆரம்பிச்சேன். அதுக்கு அப்புறம் தெலுங்கு, கன்னடம்… அதுக்கு அப்புறம் தான் மலையாளத்துக்குப் போனேன். எனக்கு பேமிலி நல்ல சப்போர்ட்டா இருந்தாங்க. எனக்கு அப்படி எதுவும் நடக்கலை. அதுக்காக நான் பொறுப்பில்லாம இருக்க முடியாது.

மலையாளத் திரை உலகில் உள்ள பெண்கள் தைரியமாக எனக்கு நடந்ததுன்னு சொல்லிருக்காங்க. இனி இப்படி வேற ஒரு பொண்ணுக்கு நடந்துறக்கூடாது என்பதற்காகத் தான் சொல்லியிருக்காங்க. அதுக்கு அர்த்தம் வேற எங்கேயுமே இப்படி நடக்காதுன்னு அர்த்தம் கிடையாது. மற்ற இண்டஸ்ட்ரில அதைப் பேசறதுக்கு முன்வரலன்னு தான் அர்த்தம்.

Also read: நாள் முழுக்க படுக்கை சீன்… கேரளாவில் சிக்கிய 5 முன்னணி நடிகர்கள்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

அங்கிருக்குற அத்தனை நடிகைகளும் பிற மொழிகளில் நடிக்கக் கூடியவர்கள். பெண்கள் வெளியே போகும்போது யாராவது ஒரு ஆளை துணைக்கு அழைத்துப் போவது நல்லது. பெண்கள் எல்லாம் சுதந்திரமா ஆகிட்டாங்க. நீங்க என்ன இப்படி துணையை அழைச்சிட்டுப் போகணும்னு சொல்றீங்கன்னு சொன்னா டெய்லி நாம கேள்விப்படற விஷயத்தைப் பேப்பர்ல பாருங்க.

அதனால ஒரு சேப்டிக்காகத் தான் சொல்றேன்.  ஒரு பெண் குற்றச்சாட்டு தெரிவித்தால் அது உண்மையா பொய்யான்னு தீர விசாரித்த பிறகு தான் சொல்லணும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top