மர்லின் மன்றோ போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்! உச்சக்கட்ட கவர்ச்சியில் அம்மணி வேற லெவல்
தமிழ் சினிமாவில் ஒரு பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். மேயாத மான் என்ற படத்தில் மூலம் வெள்ளி திரையில் முதன்முதலாக அடி எடுத்து வைத்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வந்தவர். இவரின் எதார்த்தமான நடிப்பால் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
கார்த்தி, அருண் விஜய், எஸ் ஜே சூர்யா போன்ற பல முக்கியமான நடிகர்களின் படங்களில் லீடு ரோலில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறார். தற்போது இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான பொம்மை திரைப்படம் ஒரு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எஸ் ஜே சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.
இவர் டிமான்டி காலனி 2, ஜீப்ரா, அரண்மனை 4 போன்ற படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். மேலும் சோசியல் மீடியாக்களிலும் அவ்வப்போது விதவிதமான போட்டோ சூட்டுகள் நடத்தி புகைப்படங்களை அதன் மூலம் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் முழுவதும் கருப்பு நிற உடை அணிந்து மர்லின் மன்றோ லுக்கில் வேறுபட்ட போஸில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.