பலான சீன்! நடிகையிடம் சைஸ் கேட்ட கமல் பட நிறுவனம்.. அப்புறம் என்னாச்சு தெரியுமா?

Kamalhasan: கமல் படத்தில் நடிப்பதற்காக நடிகையிடம் அவருடைய பேன்ட் சைஸ், பனியன் சைஸ், பஸ்ட் சைஸ் கேட்ட ஒரு செய்தி இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். கமலுக்கு ஒரு பிளாக்பெஸ்டர் வெற்றியை கொடுத்த திரைப்படம் தான் இந்த விக்ரம் திரைப்படம் .

அதுவும் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு வெற்றியை கமல் கொண்டாடி தீர்த்தார் என்று தான் சொல்ல வேண்டும். அப்பேர்ப்பட்ட வெற்றிக்குப் பிறகு கமலின் ரேஞ்சும் உயர்ந்தது. லோகேஷ் கனகராஜ் ரேஞ்சும் உயர்ந்தது. அந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதாவது ஒரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: கிரீன் சிக்னல் காட்டிய விஜய்சேதுபதி! அப்புறம் என்ன? அந்த ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படும் மக்கள் செல்வன்

அதில் ஒரு பிராத்தல் காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் பிராத்தல் மேனேஜராக நடித்திருப்பவர் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார். அவர் ஏகப்பட்ட படங்களில் ஒரு துணை கதாபாத்திரமாக நடித்திருப்பார் .சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் கூட ஒரு முக்கியமான சீனில் நடித்திருப்பார் பிரியதர்ஷினி ராஜ்குமார். விக்ரம் படத்தில் அவர் கமிட்டானதும் உடனே காஸ்டியூம் டீமில் இருந்து பிரியதர்ஷினிக்கு போன் வந்ததாம்.

ஆனால் புரொடக்சன் தரப்பிலிருந்து பிரியதர்ஷினிக்கு எந்த ஒரு அழைப்பும் போகவில்லையாம். முதலில் காஸ்டியூம் டீமிலிருந்து போன் போயிருக்கிறது. அப்போது பிரியதர்ஷினியிடம் ‘நாங்கள் விக்ரம் டீமில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய பனியன் பேன்ட் சைஸ் பஸ்ட் சைஸ் எங்களுக்கு வேண்டும்’ என கேட்டு இருக்கின்றனர்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரின் கணிப்பைப் பொய்யாக்கிய இயக்குனர்… அட அது அந்தப் படமா?

உடனே பிரியதர்ஷினி என்ன சொல்வது என்று தெரியாமல் என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லையே. இப்படி கேட்டால் நான் எப்படி சொல்வது என கேட்டிருக்கிறார். அதற்கு காஸ்டியூம் டீம் ‘இல்லை புரொடக்ஷன் தரப்பிலிருந்து உங்களுக்கு கால் வரும். அதன் பிறகு நீங்கள் சொல்லுங்கள்’ என சொல்லி போனை வைத்து விட்டார்களாம் .

அவர்கள் சொன்னதைப் போலவே புரொடக்ஷன் தரப்பிலிருந்து கால் போயிருக்கிறது .அதன் பிறகு தான் பிரியதர்ஷினி காஸ்டியூம் டீமுக்கு தன்னுடைய சைஸ் அளவுகளை கொடுத்தாராம் .ஆனால் ‘விக்ரம் படத்தில் நான் கமிட்டாகி இருக்கிறேன் எனது தெரிந்ததும் நான் ஏஜென்ட் லெவலுக்கு நினைத்தேன். என்னுடைய கதாபாத்திரம் அப்படித்தான் இருக்கும் என நினைத்தேன் .இருந்தாலும் லோகேஷ் படம் என்பதால் ஒரு சின்ன ரோல் இருந்தாலும் ஓகே என நினைத்து தான் இந்த கேரக்டரில் நடித்தேன்’ என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

 

Related Articles

Next Story