கணவர் மீது பொய் புகார்.. கையும் களவுமாக மாட்டிக்கொண்ட ரக்சிதா... ஏம்மா இதெல்லாம் தேவையா!..

by Rohini |
ratchitha
X

ratchitha

சமீப காலமாக தொடர்ந்து சின்ன திரையில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியவர்களின் வாழ்க்கை சின்னா பின்னமாகி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவருடைய கணவரும் ஒரு சின்னத்திரை நடிகர் தான். இவர்கள் இருவரும் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் ஒன்றாக நடித்தனர்.

ratchitha1

ratchitha1

நம்பிக்கையோடு இருந்த தினேஷ்

காதலித்து திருமணம் செய்து கொண்ட ரக்ஷிதாவும் தினேஷும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். அந்த நிலையில் தான் ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் தினேஷ் எப்படியாவது மீண்டும் ஒன்றாக சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையோடு தான் இருந்தாராம். அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கண்டிப்பாக நடக்கும் என்றும் நினைத்துக் கொண்டு இருந்தாராம்.

இந்த நிலையில் நேற்று திடீரென ரட்சிதா அவருடைய கணவர் தினேஷின் மீது மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவது பணத்தைக் கேட்டு மிரட்டுவது ஹாராஸ்மென்ட் பண்ணுவது என தொடர்ந்து அவர் மீது புகார்களை கொடுத்திருந்தார். இதைப் பற்றி தினேஷிடம் விசாரிக்க அவரை காவல் நிலையத்திற்கு வர சொன்னார்களாம்.

ratchith2

ratchith2

போலீஸார் விசாரணை

இதைப் பற்றி பேசிய தினேஷ் நாங்கள் பிரிந்து இரண்டு வருடங்கள் கழித்து முதன்முதலாக ரட்சிதாவை காவல் நிலையத்தில் வைத்து தான் பார்க்கிறேன் என்று மிகவும் மன வருத்தத்துடன் கூறினார். இருவரையும் உட்கார வைத்து போலீசார் விசாரித்தார்களாம். அப்போது ரட்சிதா கொடுத்த புகாரை தினேஷிடம் காட்ட அதை முற்றிலுமாக மறுத்து இருக்கிறார் தினேஷ்.

மேலும் தினேஷ் மொபைலையும் ரட்சிதா மொபைலையும் போலீசார் வாங்கி பார்த்தார்களாம். ரக்ஷிதா புகாரில் கூறிய எந்த ஒரு மெசேஜும் ரக்ஷிதா மொபைலிலும் தினேஷ் மொபைலிலும் இல்லையாம். அதன் பிறகு போலீசார் ரட்சிதாவிடம் இதில் தான் ஒன்றும் இல்லையே. அப்புறம் ஏன் இந்த மாதிரி புகார் கொடுத்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி கூறிய தினேஷ் இது புகார் அளிக்கும்போது வழக்கமாக எல்லா வக்கீல்களும் செய்கிற ஒன்றுதான். எக்ஸ்ட்ராவா எதையாவது சேர்த்து எழுதிக்கோங்க .அப்பதான் சீக்கிரம் ஆக்சன் எடுப்பார்கள் என்பதற்காகவே ரட்சிதா நான் ஆபாசமாக பேசினேன் ன்றும் பணத்தை கேட்டேன் என்றும் அந்த புகாரில் கூறி இருந்திருக்கிறார்.

ratchith3

ratchith3

முடிவுக்கு வந்த எங்கள் திருமண வாழ்க்கை

ஆனால் இத்தனை நாட்களாக நான் ஒரு நம்பிக்கையோடு இருந்தேன் .அதை நேற்று ரட்சிதா முற்றிலுமாக உடைத்து விட்டார் .அவர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகள் அதாவது நான் பணத்தை கேட்டேன், ஆபாசமாக பேசினேன், மிரட்டினேன், இதை எல்லாம் அவர் வாயில் இருந்து கேட்ட பிறகு இனிமேல் எனக்கு நாங்கள் சேருவோம் என்ற நம்பிக்கை போய்விட்டது என்று தினேஷ் கூறினார்.

மேலும் கூறிய தினேஷ் ரக்ஷிதாவை சுற்றி பொய்யான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய ஒரு தவறான வழி நடத்தல்களால் தான் ரட்சிதா இப்படி செய்து கொண்டிருக்கிறார். அதிலிருந்து அவர் மீண்டு வர வேண்டும் என்றும் கூறினார். மேலும் கொரோனா காலத்தில் யாருக்குமே வேலை இல்லாமல் தான் இருந்தது. அந்த நேரத்தில்தான் இந்த பணத்தைப் பற்றிய சில பல பிரச்சனைகள் எங்களுக்குள் நடந்தது.

ratchith4

ratchith4

விவாகரத்தை நோக்கிய பயணம்

அதாவது வீட்டு வாடகை மற்ற செலவுகள் எல்லாம் வழக்கமாக நான் தான் பார்த்துக் கொண்டிருந்தேன் .ஆனால் கொரானா காலத்தில் அது என்னால் முடியவில்லை. அப்பொழுதுதான் ரச்சிதாவிடம் இந்த மாதம் இவை எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொள் என்று கூறியிருந்தேன். அந்த நேரத்தில் அவளிடம் கொஞ்சம் காசு இருந்ததது. அதனால் தான் அப்படி சொன்னேன். இதை தான் அவர் நான் பணத்தை கேட்டு மிரட்டினேன் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார் என்று தினேஷ் கூறினார். மேலும் அந்த கேஸும் நேற்று இரவோடு முடிக்கப்பட்டது .இனிமேல் நீங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியது தான் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள் என்றும் தினேஷ் கூறினார்.

அதோடு எங்களுக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்காக நிறைய கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியும் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த பேட்டியில் மனமுறுக தினேஷ் பேசினார்.

இதையும் படிங்க : நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்! அந்த பொண்ணு தூக்கு மாட்டிக் கொள்ள போயிட்டா! பொன்னம்பலம் அதிர்ச்சி தகவல்

Next Story