Connect with us

Cinema News

ராதா மகள்!.. கோ பட ஹீரோயின் கார்த்திகா நாயர் திருமணம்.. 80ஸ் பிரபலங்கள் மொத்தமும் ஆஜர்!..

நடிகை ராதாவின் மகளும் கோ பட நடிகையுமான கார்த்திகா நாயர் ரோகித் மேனன் என்பவரை திருவனந்தபுரத்தில் உள்ள பீச் சொகுசு ரெசார்ட்டில் இன்று திருமணம் செய்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் 80களின் கனவுக் கன்னியாக அம்பிகா மற்றும் அவரது தங்கை ராதா தென்னிந்திய சினிமாவையே கலக்கினர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்று கன்னட மொழிகளில் நடித்து அசத்திய ராதா, ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

இதையும் படிங்க: அமிதாப்பச்சானிடம் பல்பு வாங்கிய சீயான்… அதுக்கு அப்புறம் நடந்ததுதான் செம போங்க!…

அவருக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என இரு மகள்களும் விக்னேஷ் நாயர் என்கிற மகனும் உள்ளார்.

ஜீவா, பியா பாஜ்பாய், அஜ்மல் நடிப்பில் வெளியான கோ படத்தில் கார்த்திகா நாயர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் வெளியான முதல் படமே கார்த்திகா நாயருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

இதையும் படிங்க: சிக்குன்னு இருக்கியே செல்லம்!.. கனிகாவின் கட்டழகில் கிறங்கிய நெட்டிசன்கள்…

அதன் பின்னர் விஜய்சேதுபதி, ஷாம், ஆர்யா நடித்த புறம்போக்கு எனும் பொதுவுடமை படத்தில் நடித்திருந்தார். மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்து வந்த கார்த்திகா நாயர் இன்று ரோகித் மேனன் என்பவரை திருவனந்தபுரத்தில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் திருமணம் செய்துக் கொண்டார்.

அவரது திருமணத்தில் 80களின் பிரபலமான நடிகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை மனமார வாழ்த்தியுள்ளனர். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ், அவரது மனைவி பூர்ணிமா பாக்கியராஜ், நடிகை ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், மேனகா, ரேவதி, அம்பிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

google news
Continue Reading

More in Cinema News

To Top