Cinema News
10 வருடத்தில் 122 படங்கள்.. இருந்தாலும் அஜித் விஜயுடன் நடிக்க முடியல! யார் அந்த நடிகை தெரியுமா?
Actress Radha: தமிழ் சினிமாவில் 80கள் காலகட்டத்தில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ராதா. கமல், ரஜினி, சத்யராஜ், உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராதா முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அந்தப் படத்தின் போது பாரதிராஜாவுக்கு பெரும் சவால் காத்துக் கொண்டிருந்தது. ‘சிவாஜிக்கு ராதாவை போய் ஜோடி போடுகிறீர்களே!.. இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?’ என்று பலரும் கூறி வந்த நிலையில் எதையும் காது கொடுத்து கேட்காமல் துணிந்து இறங்கி வெற்றிக் கண்டார் பாரதிராஜா. அதற்கு முக்கியக் காரணமாக இருந்ததும் ராதாதான்.
இதையும் படிங்க: இது கண்ட்ரோல் இருக்கவங்களுக்கு மட்டும்!.. டைட் உடையில் நச்சுன்னு காட்டி ஜில்லாக்கும் யாஷிகா…
முதல் படமான அலைகள் ஓய்வதில்லை படத்தின் வெற்றி ராதாவை தேடப்படும் நடிகையாக மாற்றியது. அந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்து ராதாவுக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது. நடிக்க வந்து 6 வருடத்திலேயே 100 படங்களுக்கு மேல் நடித்தார் ராதா. அதுமட்டுமில்லாமல் 10 வருடத்திற்குள் 122 படங்களில் நடித்த ஒரே நடிகை ராதா என்ற பெருமையையும் பெற்றார்.
ராதாவின் ஆஸ்தான ஜோடியாக கமல் மற்றும் மோகனைத்தான் கூறுவார்கள். அந்த இருவருடனான ராதாவின் காம்போதான் ரசிக்கும் படியாக அமைந்தது. பிரபு – குஷ்பு என எப்படி அமைந்ததோ அதே போல்தான் ராதா – கமல் மற்றும் ராதா – மோகன் ஜோடியும் அமைந்தது. இவர் நடித்த அந்த 10 வருடங்களும் மிகவும் கோலோச்சிய நடிகையாகவே திகழ்ந்தார்.
இதையும் படிங்க: பட்டாக்கத்தியை நல்லா தீட்டுராங்கே போல! விஜய்க்கு எதிரா இந்த நடிகரை கொம்பு சீவும் பிரபலம்
இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியான சாந்தி என் சாந்தி திரைப்படம்தான்.அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக நுழைந்தார். பின் குழந்தைகள் , குடும்பம் என முழு குடும்பப் பெண்மணியாகவே மாறினார் ராதா. இந்த நிலையில் ஒரு பேட்டியில் ராதாவிடம் யார் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்? என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராதா அஜித்தை மிகவும் பிடிக்கும் எனவும் அப்புறம் விஜயுடன் டான்ஸ் ஆட ஆசையாக இருக்கிறது எனவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் சூர்யாவுடன் ஒரு எமோஷனல் ரோல் பண்ண வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உனக்கும் எனக்கும் தான் பிரச்சினை! மகளுக்காக சரணடைந்தாரா ரஜினி.. பின்னணியில் நடந்த சம்பவம்