பட்டாக்கத்தியை நல்லா தீட்டுராங்கே போல! விஜய்க்கு எதிரா இந்த நடிகரை கொம்பு சீவும் பிரபலம்

by Rohini |
viji
X

viji

Actor Vijay: இப்போது விஜயின் அரசியல் வேகம் சூடுபிடித்திருக்கிறது. ஒரு பக்கம் கோட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது தனது மக்கள் இயக்கம் சார்பாக நிர்வாகிகளை சந்தித்து அரசியல் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.

பிப்ரவரி 4 ஆம் தேதி விஜயின் அரசியல் சின்னம் குறித்து கண்டிப்பாக தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவாராகவும் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்களின் அபிமானத்தை பெறுவதற்காக அவ்வப்போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் தனது இயக்கம் சார்பாக செய்து வருகிறார்.

இதையும் படிங்க: உனக்கும் எனக்கும் தான் பிரச்சினை! மகளுக்காக சரணடைந்தாரா ரஜினி.. பின்னணியில் நடந்த சம்பவம்

சமீபத்தில் கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை நேரில் சென்று வழங்கினார் விஜய். அதற்கு முன்பாக பள்ளி மாணவர்களுக்காக நோட் புத்தகங்களை வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.

இப்படி அரசியல் முன்னெடுப்புகளை தீவிரமாக செய்து வரும் விஜய்க்கு எதிராக அவருக்கு இணையான ஒரு நபரை கொண்டு வர வேண்டும் என ஒரு குரூப் தீவிரமாக செயல்பட்டு வருவதாக வலைப்பேச்சு அந்தனன் கூறினார். அவர் வேறு யாருமில்லை நடிகர் அஜித்தான். என்னடா அவர் வீட்டை விட்டே வெளியே வரமாட்டார். எப்படி அரசியல் பக்கம் வருவார் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும்.

இதையும் படிங்க: ‘மயில்போல பொண்ணு ஒன்னு’ பாடலை பாடி பவதாரிணிக்கு விடை கொடுத்த குடும்பத்தினர்…

ஆனால் உண்மையிலேயே அஜித்தை அவ்வப்போது பிரபல மூத்த பத்திரிக்கையாளரான ரெங்கராஜன் பாண்டே சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்தே இருவருக்கும் ஒரு நெருக்கமான நட்பு இருந்து வருகிறதாம். அப்பொழுதே அரசியல் குறித்து இருவரும் பேசினார்களாம். இவர்தான் அஜித்துக்கு அரசியல் குறித்து அவ்வப்போது அப்டேட்களை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மத்தியில் ஆளும் அரசுக்கு பி.ஆர்.ஓவாகவும் அஜித்தை மாற்ற ரெங்க ராஜன் பாண்டே முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே அப்படி விஜயிடம் கேட்க அவர் முடியாது என சொல்லிவிட்டாராம். அதனால் அவருக்கு இணையான புகழ் வாய்ந்த நடிகர் அஜித்தை வைத்தே விஜயின் அரசியல் எண்ணத்தை சுக்கு நூறாக்க ப்ளான் பண்ணி வருவதாகவும் சொல்லப்படுகிறதாம்.

இதையும் படிங்க: 4 கோடி போனா போகட்டும்!.. ஆனா அமீருக்கு கொடுக்க மாட்டேன்!.. சூர்யா செய்வது சரியா?…

Next Story