பாலையாவிடம் சிக்கிய அடுத்த நடிகை!.. விசித்ரா சொன்னது உண்மைதானா? அடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்..
Actress Radhika Apthe: தமிழில் கபாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே. அதன் பிறகு கார்த்தியுடன் ஒரு படத்தில் நடித்திருப்பார். இயல்பிலேயே மிகவும் தைரியசாலியான நடிகை ராதிகா ஆப்தே. ஒரு சில படங்களில் யாரும் நடிக்க முன்வராத அந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் மிகவும் துணிச்சலாக வந்து நடித்தவர்.
ஒரு படத்தில் முழுமையாக நூடாகவே நடித்திருக்கிறார். பாலிவுட்டில் மிகவும் பேசப்பட்ட நடிகையாகவே மாறியிருக்கிறார் ராதிகா ஆப்தே. சமீபத்தில் கூட ஒரு விமான நிலையில் ஒட்டுமொத்த பயணிகளையும் நெடு நேரமாக காக்க வைக்க அதில் ராதிகா ஆப்தேவும் அடங்குவார். அனைவரையும் தரையில் உட்கார வைத்து ஊழியர்கள் வேடிக்கை பார்த்தனர். அதன் பிறகு இந்த விஷயத்தை மிகவும் வெளிப்படையாக தைரியமாக போட்டோ எடுத்து போட்டு இணையத்தில் பதிவிட்டார்.
இதையும் படிங்க: லால்சலாமில் முதல் பாதி சரியில்லை தான்… டைரக்டராக நான் செஞ்சது தப்பு… ஓபனா சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
இந்த நிலையில் நேற்று ராதிகா ஆப்தே அளித்த பேட்டி மிகவும் வைரலாகி வருகின்றது. அவரிடம் நிருபர்கள் எல்லா மொழிகளிலும் நடித்துள்ள நீங்கள் எந்த மொழி சினிமா உங்களை வேதனைக்குள்ளாக்கியது என கேட்டனர். அதற்கு பதிலளித்த ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமாவை போல் ஒரு மோசமான சினிமாவை நான் பார்த்ததே இல்லை. அங்கு உள்ள ரசிகர்கள் அங்குள்ள ஹீரோக்களை தெய்வமாக நினைத்து வணங்குகின்றனர்.
ஆனால் அதை அந்த ஹீரோக்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்த ஒரு மரியாதையை வைத்து தனக்கு கீழ் உள்ள ஆர்ட்டிஸ்ட்டுகளை அடிமைகளாக நடத்துகின்றனர். அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது. நான் தெலுங்கில் ஒரே ஹீரோவுடன் இரு படங்களில் நடித்திருக்கிறேஎன்.
இதையும் படிங்க: எத்தனை ஹீரோக்கள் நடிக்க வேண்டிய படம் தெரியுமா? ஆனால் சொன்ன காரணம்.. அதான் லேடி சூப்பர் ஸ்டார்
நடிக்கும் போது அந்த ஹீரோ அந்த மாதிரி விஷயங்களில் என்னை நெருங்க ஆரம்பித்திருக்கிறார். அவர் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். இரண்டு முறையும் அப்படி நடந்தது என கூறியிருக்கிறார். இந்த ஒரே ஒரு க்ளுவை வைத்து அந்த நடிகர் கண்டிப்பாக பாலகிருஷ்ணன்தான் முடிவு செய்துவிட்டார்கள். அவருடன் மட்டும்தான் ராதிகா ஆப்தே இரண்டு படங்களில் நடித்திருக்கிறாராம்.
அதே போல் தமிழில் ரஜினியுடன் நடிக்கும் போது அவர் ஒரு ஜெண்டில்மேனாக நடந்து கொண்டார். அவரை போல் ஒரு நடிகரை நான் இந்தியாவிலேயே பார்த்ததில்லை என்றும் ராதிகா ஆப்தே கூறினார். இந்த செய்தி வெளியானதில் இருந்து அப்போ விசித்ரா சொன்னதெல்லாம் உண்மைதானா என இப்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்த தகவலை பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க: எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..