விஜயகாந்துக்கு அடிக்கும் பழக்கம் அவரால்தான் வந்தது!.. ராதிகா சொன்ன சீக்ரெட்!…

by சிவா |   ( Updated:2023-04-22 03:49:09  )
vijayakanth
X

vijayakanth

தமிழ் சினிமாவில் கருப்பு தங்கமாக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் நடிகனாக வேண்டும் என்கிற ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்து வாய்ப்புகள் தேடினார். சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து, வில்லனாக நடித்து பின் ஹீரோவாக மாறியவர். ஆக்‌ஷன் ஹீரோவாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் குடியேறியவர். குறிப்பாக விஜயகாந்த் படம் என்றால் சண்டை காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும் என ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வார்கள். அதிலும், போலீஸ் அதிகாரியாக பல படங்களில் அதகளம் செய்துள்ளார்.

vijayakanth
vijayakanth

விஜயகாந்த் என்றால் அடிப்பார் என்கிற இமேஜை அவர் உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், நிஜவாழ்விலும் அவர் அப்படித்தான் இருந்தார். அரசியல் கட்சி துவங்கிய பின்னரும் பொதுவெளியில் கட்சி நிர்வாகிகளை அவர் அடித்த காட்சிகள் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி அவர் கிண்டலுக்கு உள்ளானார். ஆனாலும் அதுதான் அவரின் இயல்பு என்பதால் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை.

ஒருமுறை, எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்த ஒரு படத்தின் விழாவில் பேசிய ராதிகா ‘எஸ்.ஏ.சி படப்பிடிப்பில் மிகவும் கண்டிப்பாக இருப்பார். விஜயகாந்த் இவருக்கு மிகவும் பயப்படுவார். ஏனெனில் பட்டெனெ எல்லோரையும் எஸ்.ஏ.சி அடித்துவிடுவார். எல்லோரையும் அடிக்கும் பழக்கம் விஜயகாந்துக்கு இவரால் வந்தது என நான் நினைக்கிறேன்’ என கிண்டலாக பேசினார்.

சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக மாற்றியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அதனால் அவர் மீது எப்போதும் மரியாதை கொண்டவராக விஜயகாந்த் இருந்தார். அதேபோல், விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ராதிகா. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டனர். ஆனால், சில காரணங்களால் ராதிகாவை விட்டுவிட்டு பிரேமலதாவை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story