Cinema History
ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு அப்போ தான் தெரிய வரும்….ரஞ்சிதா எதைச் சொல்கிறார்னு பாருங்க..!
தமிழ்சினிமாவில் அமைதியான அடக்க ஒடுக்கமான அழகான நடிகைகள் சிலர் தான் இருக்காங்க. அவர்கள் படங்கள் பார்ப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் விரும்புவர். அவர்களில் ஒருவர் தான் நடிகை ரஞ்சிதா.
எத்தனையோ சவால்கள் வந்த போதும் அதை எல்லாம் பெரிய பொருட்டாகக் கருதாது தான் உண்டு தன் வேலை உண்டு என்று துணிச்சலாக இருந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது வாழ்வில் நடந்த சில சுவையான தருணங்களை இப்போது பார்ப்போம். அவர் சொல்ல அவரது மறக்க முடியாத அனுபவங்களைக் கேட்டு ரசிப்போம்.
எனக்கு நடிக்கணும்கற ஐடியாவே இல்ல. காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம் லா (சட்டம்), ஜர்னலிசம், ஐஏஎஸ் னு மூணு ஆப்ஷன்ஸ் இருந்தது. முதல்ல சினிமாவுல நடிக்க ஆப்பர் வந்தபோது ட்ரை பண்ணித்தான் பாக்கலாமே…இல்லேன்னா திரும்பவும் படிக்க வந்துடலாம்னு நினைச்சேன். அப்படி தான் நடிக்க ஆரம்பிச்சேன்.
பர்ஸ்ட் ஒரு தெலுங்கு படம் நடிச்சிக்கிட்டு இருந்தேன். அதான் எனக்கு முதல் படம். அந்த ட்ரைலர் பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டு அனுப்பிச்சாரு. அதுக்கு முன்னாடி கலான்னு டான்ஸ்மாஸ்டர் அவங்களும் நீ போய் பாருன்னு சொல்லிருந்தாங்க. அப்போ ஏஆர்எஸ் கார்டன் வந்துரு. ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கணும்னு சொன்னாங்க. அப்புறம் 10 நாள்கள்ல சூட்டிங் நடந்துச்சு.
ஸ்கூல் படிக்கும்போது அதிகமா யார்கிட்டயும் பேச மாட்டேன். மிடில் கிளாஸ் பேம்லி. புக் நிறைய படிப்பேன். ஒரே ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி என்னன்னா என்சிசி போய்க்கிட்டு இருந்தேன். அதிலயும் ரொம்ப பேருக்கிட்ட பேச மாட்டேன்.
ஆனா இந்த பீல்டுல எல்லார்கிட்டயும் சகஜமா பேசறது, பழகறது கத்துக்கிட்டேன். ஸ்கூல் படிக்கும்போதுலாம் பொறுமையே இருக்காது. பஸ் டைம்முக்கு வரலேன்னா ஸ்கூலுக்கு நடந்தே போயிடுவேன். ஆனா இங்க வந்து பொறுமையைக் கத்துக்கிட்டேன். நான் நடிக்க வந்து 14 வருடங்கள் ஆகிவிட்டது. முதல்ல நான் அர்ஜூன் சாரு கூட நடிச்ச படம் ஜெய்ஹிந்த்.
அடுத்த படம் கர்ணா. மலரே…மௌனமா…?ங்கற மெலடி சாங். இந்தப் பாட்டு போட்டுக் காட்டுனாரு.. கேளுங்கன்னாரு.. நீங்க ரொம்ப அநியாயம் பண்றீங்க. இது ரொம்ப ஸ்லோ சாங் போரடிக்குதுன் னு சொன்னேன். பர்ஸ்ட் கேட்டப்போ ஆக்சுவலி இந்த சாங்க ஜெய்ஹிந்த் படத்துக்கு ரெக்கார்ட் பண்ணிருந்தேன்.
அதுல ஸ்பேஸ் இல்லன்னு இந்தப்படத்துக்கு போட்டுருக்கேன். நீ வேண்ணா பாரு. இந்த சாங் இந்த வருடம் முழுவதும் சூப்பர்ஹிட் சாங்காகப் போகுதுன்னு சொன்னாரு. இவரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு இருக்காருன்னு சொன்னேன்.
அங்கிருந்து வேறொரு சூட்டிங் போயிருந்தேன். சாங் கேட்டு கேட்டு அந்த மூவ்மெண்ட் இதெல்லாம் எனக்கு ஈசியா இருந்துச்சு. எனக்கு புக்ஸ் படிக்கிறது ரொம்ப பிடிக்கும். எவ்வளவு பிசியா இருந்தாலும் 2 பக்கமாவது புத்தகத்துல படிக்கணும். என்சிசி கேம்ப்ல நானும் எனது கணவரும் படிக்கும்போது பிரண்ட்ஸ்.
அவர் மென்ஸ் காலேஜ். நான் உமன்ஸ் காலேஜ். அப்போ சந்திச்சது தான். அவரு என்ன டெனஷனா இருந்தாலும் வெளில இருந்தாலும் வேலைல இருந்தாலும், நான் கொடுத்தாலும் நார்மலா இருப்பாரு. வெளியே தெரியவே தெரியாது. நிறைய வாட்டி கேட்டுருக்கேன். இப்படி எல்லாம் நடந்துருக்கே. அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டீங்களா? ன்னு. அது நடந்துட்டு இருக்கும்.
அதுக்கெல்லாம் பீல் பண்ணி நான் உட்கார்ந்துக்கிட்டு இருக்க முடியுமா? ன்னு சொல்வாரு. ஆபீஸ்ல என்ன டென்ஷன் இருந்தாலும் வீட்டுக்கு வந்து சத்தம் போடுறதுன்னு நிறைய பேரை நான் பார்த்துருக்கேன். ஆனா அவருக்கிட்ட எதுவுமே தெரியாது. நான் ஈவினிங் பார்ட்டிக்குப் போயிட்டு யாராவது ஆபீஸ்ல இப்படி நடந்துருக்குன்னு சொல்லும்போது ஓ…இதெல்லாம் நடந்துருக்கான்னு தெரியவரும்.
ஆனா அவருக்கிட்ட எதுவுமே தெரியாது. அவரு எப்பவும் கூலா இருப்பாரு. அவரு கோபப்பட்டோ நான் பார்த்ததே இல்ல. நான் கூட அவருக்கிட்ட நிறைய பேசுவேன். அவங்க நம்மள இப்படி பேசிருக்காங்க…எப்படி அவங்க இப்படி பேசுவாங்கன்னு சண்டை போடுவேன். ஆனா அவரு சொல்வாரு. உன் வாழ்க்கையில அவங்க என்ன பெரிய இம்பார்ட்டன்ஸா கொடுக்கப் போறாங்க.
ஒண்ணும் இல்ல. நீ கூலா எடுத்துக்க. அது யாரா இருந்தாலும் சரி. அவங்க இப்படி பேசுனது புடிக்கலயா விட்டுடுன்னு சொல்வாரு. அவருக்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் அப்சர்வ் பண்ணியிருக்கேன்.
நான்கூட சில சமயம் என்ன இப்படி ஆயிடுச்சேன்னு பீல் பண்ணுவேன். மேக்சிமம் ஒன் அவர் தான். நான் நியை புக்ஸ் படிப்பேன். எந்த மூடுல இருந்தாலும் அந்த புக்கைத் திறந்தா அந்த கதைக்குள்ள இன்வால்மெண்டா ஆயிடுவேன். பெரிய சண்டை நடந்தாலும் இரண்டு நாள் கழிச்சி எதைப்பத்தி சண்டை போட்டுருக்கோம்கறது கூட எனக்கு ஞாபகம் இருக்காது.
உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்குதோ அதைக் கண்டிப்பா செய்யணும். கல்யாணத்துக்கு அப்புறம் சினிமாவைக் குறைத்துவிட்டேன். டைரக்ட் பண்றது தான் எனக்கு ஆசை. காமெடி, ஆக்ஷன், பேன்டசி படங்கள் இயக்க ஆசை.