நோ சொல்லியிருந்தால் இதெல்லாம் நடக்காது! நடிகரை பற்றி விசித்ரா கூறியதற்கு பதிலடி கொடுத்த கமல் பட நடிகை

by Rohini |
vichi
X

vichi

Vichithra: ஆறு சீசன்களை கடந்து பிக்பாஸ் இப்போது ஏழாவது சீசனில் மிகவும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக மிக் எவிக்‌ஷன் என்ற புது கான்சப்டை வைத்து அனன்யா வெளியேற்றப்பட்டார்.

புது புது டாஸ்க், புது புது விதிமுறைகள் என இந்த சீசன் முற்றிலும் வித்தயாசமானதாகவே பார்க்கப்படுகிறது. முதல் சீசனில் பிக்பாஸ் சுவர் மீது ஏறி வெளியேற முயன்ற பரணியை அடுத்து இப்போது ஏழாவது சீசனில் கூல் சுரேஷ் அந்த முயற்சியை எடுத்தார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் இத செஞ்சிருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது! மிஸ் பண்ண வருத்தத்தில் ரசிகர்கள்

அவருக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி மீண்டும் பிக்பாஸ் வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள். இன்றுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து 75 நாள்கள் ஆகிவிட்டது. அதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் வகையில் வீட்டிற்குள் இனிப்புகள் வழங்கப்பட்டு அவர்கள் சந்தோஷமாக இருக்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

இந்த 75 நாள்களில் பிக்பாஸில் நடந்த ஹைலைட்டான விஷயமே விசித்ரா ஒரு பிரபல தெலுங்கு நடிகரை பற்றி கூறியதுதான். தன்னை தவறான எண்ணத்தில் அவர் அறைக்கு அழைத்தார். அதிலிருந்தே இந்த சினிமாவில் இருந்து விலகிவிட்டேன் என்றெல்லாம் கூறினார்.

இதையும் படிங்க: ப்ரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் படத்தின் கதை தானா..? இது அது இல்ல..! கலாய்க்கும் ரசிகர்கள்..!

அவர் சொன்னதில் இருந்து அந்த செய்தி தீப்பிடித்து எரிந்தது. அதில் அந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணன்தான் என்றும் சமூக வலைதளங்களில் கூறி வந்தார்கள். இந்த நிலையில் பிரபல நடிகை ரேகா இதை பற்றி சமீபத்தில் கூறியிருக்கிறார்.

பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ரேகா. அவரிடம் இதைப் பற்றி கேட்ட போது ‘எல்லா விஷயங்களுக்கும் ஒரு நல்ல பாதை, ஒருகெட்ட பாதை என இருக்கும். அது அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதையை பொறுத்தது. இந்த மாதிரி நடக்கும் போது ஆரம்பத்திலேயே நோ சொல்லிவிடுவதுதான் நல்லது. அப்படி இல்லாத பட்சத்தில்தான் இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் நடக்கும்.’

இதையும் படிங்க: வாய்ப்பு வாங்க சந்திரபாபு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. அட அவர் அப்பவே அப்படித்தான்!..

அழகை ரசிப்பது ஒன்றும் தவறில்லை. நானும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். என்னிடமும் இப்படித்தான் நடந்திருக்கிறார்கள் என நோ சொல்வதை பற்றி கூறினார். மேலும் விசித்ரா சொன்ன அதே நடிகருடன் நானும் சேர்ந்து நடித்திருக்கிறேன். என்னை மிகவும் மரியாதையாகத்தான் நடத்தினார். ரேகாஜி என்றுதான் என்னை அழைப்பார் என்று ரேகா கூறினார்.

Next Story