Connect with us
chandrababu

Cinema News

வாய்ப்பு வாங்க சந்திரபாபு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. அட அவர் அப்பவே அப்படித்தான்!..

50களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், சிவாஜி கூட சாதாரண உடையில் இருந்தால் இவரோ கோட் சூட் அணிந்துகொண்டுதான் நடிப்பார். பிச்சைக்காரன் வேடத்தில் நடித்தாலும் கிழிந்த கோட் போட்டுக்கொண்டு நடிப்பார். ஏனெனில் வெஸ்டர்ன் வாழ்க்கை, ஸ்டைல், இசை ஆகியவற்றில் அதிக ஆர்வமுடையவர் இவர்.

தான் நடித்த படங்களிலும் வெஸ்டர்ன் டைப்பில் பாடல்களை பாடி அசத்தினார். இவர் சிறந்த பாடகரும் கூட. இவர் பாடிய புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, குங்குமப்பூவே கொஞ்சிப்புறாவே, நானொரு முட்டாளுங்க, பிறக்கும்போது அழுகின்றாய் போன்ற பல பாடல்கள் சாகா வரம் பெற்றவை.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என பலரின் படங்களிலும் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரை ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என பெயர் சொல்லி அழைக்கும் ஒரே நடிகர் இவர்தான். சிவாஜி, ஜெமினி ஆகியோரை வாடா போடா என்றுதான் பேசுவார். எல்லோரின் நடிப்பையும் நக்கலடிப்பார். அதனால், படப்பிடிப்பு தளத்தில் இவர் வந்தாலே எம்.ஜி.ஆர் உள்ளிட்ட நடிகர்களுமே ஜெர்க் ஆவார்கள்.

சந்திரபாபுவுக்கு எந்த சினிமா பின்புலமும் இவருக்கு இல்லை. பல சினிமா கம்பெனிகளுக்கும் சென்று வாய்ப்பு கேட்டார். யாரும் கொடுக்கவில்லை. வீட்டிலோ அவரின் அப்பா அவரை வேறு வேலை எதாவது செய் என அழுத்தம் கொடுத்தார். அப்போது எம்.ஜி.ஆர் வளர்ந்து வரும் நேரம் அவரிடம் வாய்ப்பு கேட்கப்போனார் சந்திரபாபு.

chandrababu

எனக்கு நடிக்க தெரியும், பாட தெரியும், ஆட தெரியும் என அனைத்தையும் செய்தும் காட்டினார். இதைப்பார்த்த எம்.ஜி.அர் ‘இதை ஏன் என்னிடம் செய்து காட்டுகிறாய். எதாவது சினிமா கம்பெனிக்கு போய் செய்து காட்டு’ என அனுப்பிவிட்டார். அதன்பின். ஒரு ஸ்டுடியோவில் என்.எஸ்.கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் ‘ஒருநாள் என்னை பார்க்க ஒரு பையன் வந்தான். அவனிடம் ஏதோ இருக்கிறது’ என சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்தார் சந்திரபாபு.

இதையும் படிங்க: சிவாஜியையே ஓவர்டேக் செய்த அசத்தலான நடிப்பு!.. அந்த படத்திலிருந்து டேக் ஆப் ஆன சந்திரபாபு!..

எம்.ஜி.ஆர் என்னை பார்க்க வர சொன்னார் என காவலாளியிடம் பொய் சொல்லிவிட்டு வந்தேன் என சொல்ல, அவரை எம்.ஜி.ஆரும், என்.எஸ்.கிருஷ்ணன் அமர வைத்தனர். என்.எஸ்.கிருஷ்ணன் அவரிடம் ‘உனக்கு நான் வாய்ப்பு கொடுக்கிறேன். பால்காரன் பால் பீசி கொடுக்க வேண்டும். பால் ஏன் இவ்வளவு தண்ணியா இருக்கு என்று ஒருவர் கேட்பார்’ இதுதான் காட்சி. எங்கே நடித்துக்காட்டு’ என சொன்னார்.

chandrababuchandrababu

அங்கும் மாடும் இல்லை. கையில் பாத்திரமும் இல்லை. ஆனாலும், அவையெல்லாம் இருப்பது போலவே நினைத்து சந்திரபாபு சரியாக நடித்து காட்டினார். பாலை என்.எஸ்.கே. கையில் கொடுப்பது போல் நடிக்க ‘என்னப்ப பால் தண்ணியா இருக்கே’ என என்.எஸ்.கிருஷ்ணன் கேட்க சந்திரபாபுவோ ‘நான் பாலில் தண்ணீர் கலக்க மாட்டேன்.. தண்ணீரில்தான் பாலை கலப்பேன்’ என சொல்ல அங்கிருந்த எல்லோரும் சிரித்துவிட்டனர்.

அதன்பின் எம்.ஜி.ஆர் தான் நடித்த குலோபகாவலி படத்தில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்தார். எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாவார் சந்திரபாபு. ஆனாலும், அடிமைப்பெண் படத்தில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: நண்பனுக்காக காதலியை அனுப்பி வைத்த காதல் மன்னன்!.. ஊஞ்சலாடிய சந்திரபாபுவின் இளமை!..

google news
Continue Reading

More in Cinema News

To Top