எல்லா நடிகையும் கை விட்டாங்க!.. நொருங்கிப்போன பாண்டியராஜன்.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேலைகளை செய்து பின்னர் பாக்கியராஜின் காலில் விழுந்து கெஞ்சி கண்ணீர்விட்டு அவரிடம் உதவியாளராக சேர்ந்தவர் பாண்டியராஜன். பாக்கியராஜின் பல படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்துள்ளார். உள்ளுக்குள் இவருக்கும் தனது குருநாதர் போல இயக்குனர் மற்றும் நடிகராக வேண்டும் என்கிற ஆசை அதிகமாகவே இருந்தது.
கன்னிராசி திரைப்படம் மூலம் பாண்டிராஜ் இயக்குனராக மாறினார். இப்படத்தில் பிரபு, ரேவதி, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இளையராஜா இசையில் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. படமும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் பாண்டியராஜன் நடிக்கவில்லை.

aan paavam
அடுத்து அவர் இயக்கிய திரைப்படம் ஆண்பாவம். இப்படத்தில் பாண்டியன், சீதா, வி.கே.ராமசாமி, ரேவதி, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால், இந்த படத்தை எடுக்க பாண்டிராஜ் படாத பாடு பட்டாராம். முதலில் இந்த கதையில் நடிக்க எந்த ஹீரோவும் முன்வரவில்லை. ஒருவழியாக பாண்டியனை சம்மதிக்க வைத்தார். பாண்டிராஜனே இரண்டாவது கதாநாயகனாக நடிப்பது என முடிவானது .பாண்டியனுக்கு ஜோடியாக நடிகை சீதாவை அறிமுகம் செய்தார். இதுதான் சீதாவுக்கு முதல் படம்.
ஆனால், மற்றொரு கதாநாயகிக்கு நடிகை கிடைக்கவில்லை. ஏனெனில் வாய் பேச முடியாத பெண்ணாக நடிக்க வேண்டும். அதை எந்த நடிகையும் விரும்பவில்லை. எனவே, பாண்டிராஜ் சோர்ந்து போனார். ஒருமுறை ரேவதியை பாண்டியராஜன் சந்தித்த போது அப்படத்தின் கதையை கூறியுள்ளார். விழுந்து விழுந்து சிரித்த ரேவதி ‘இந்த படத்தில் நான் நடிக்கிறேன்’ என ஆர்வமுடன் முன் வந்தாராம். அதேபோல், கொடுத்த சம்பளத்தையும் வாங்கி கொண்டாராம். படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சுவரை தாண்டுவது போல ஒரு காட்சி வரும். அதை சிங்கிள் டேக்கில் ஒகே செய்து அசத்தினாராம் ரேவதி.
ஆண் பாவம் திரைப்படம் 1985ம் வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விவாகரத்தை ஏன் அப்படி கொண்டாடினேன் தெரியுமா?.. இவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சிருக்காரா ஷாலினி?.. அடக்கடவுளே!..