Connect with us
Pandiyan. Revathi

Cinema History

பாரதிராஜாவுக்கு முன்னாடியே ரேவதிக்கு ‘பளார்’ கொடுத்த பாண்டியன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்!..

சில நேரங்களில் பிளான் எதுவும் பண்ணாமல் நாம் செய்யும் காரியங்கள் பக்காவாக ஒர்க் அவுட் ஆகிவிடும். அதே நேரம் பிளான் பண்ணி செய்தால் சொதப்பி விடும். அந்த வகையில் நடிகை ரேவதி முதன் முதலில் தமிழில் அறிமுகமான படம் மண்வாசனை. மிகவும் யதார்த்தமாக நடித்து அசத்தியிருப்பார். அப்போது அவரது சினிமா அனுபவம் எப்படி இருந்தது என்று அவரே தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

மண்வாசனை படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு தேனில நடக்கும்போது 4 மணிக்கு அம்மா எழுப்பி விடுவாங்க. நான் படிச்சிக்கிட்டு இருப்பேன். சூட்டிங்னு சொன்னதும் வருவேன். எனக்கு பாண்டியனைப் பார்த்ததும் ஒண்ணும் தோணல. நானும் புதுமுகம். அவரும் புதுமுகம். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் வந்தேன். நடிகை ஆகணும்னு நினைக்கல. நடிகை ஆனதும் இப்படி பண்ணனும்னு நினைக்கல. பாரதிராஜா சாரு படத்துல நடிக்கணும்னும் நான் யோசிக்கவே இல்ல. எல்லாமே நிமித்தம் தான்.

Manvasanai

Manvasanai

படத்துல என்ன கதைன்னும் தெரியாது. ‘முத்துப்பேச்சி’ பாத்திரத்துல நடிக்க முடியுமாங்கற நம்பிக்கையும் கிடையாது. பாரதிராஜா சார் என்ன சொன்னாரோ அதை மட்டும் தான் செஞ்சேன். ஆனா அந்தப் படம் போகப் போக கண்ணன் சாரோட கேமரா நான் ஏன் அங்க பார்க்குறேன்… நான் ஏன் இங்க பார்க்குறேன்கற அதை மட்டும் மண்வாசனை டயத்துல புரிஞ்சிக்கிட்டேன்.

எந்த பிளானும் கிடையாது. டைரக்டர் சார் இன்னும் ஜாஸ்தியா வேணும்னா அதே மாதிரி பண்ணுவேன். காந்திமதி அக்காவோட வீட்டுக்குப் போயிட்டு நான் ஏதேதோ சொல்லிக்கிட்டு நடந்துக்கிட்டே போவேன். அதுதான் எனக்கு பயங்கர சேலஞ்ச்சா இருந்தது. நான் அந்த மாதிரி பொண்ணே கிடையாது.

இதையும் படிங்க… இனிமே எவனாச்சும் பாடி ஷேமிங் பண்ணுவானா?.. ஒரேயடியாக உடம்பை குறைத்த மஞ்சிமா மோகன்!..

எனக்கு அந்த மாதிரி பாஷை தெரியாது. அப்படி பாவாடை சட்டை தாவணி எல்லாம் வாழ்க்கையில போட்டதே கிடையாது. பாடி லாங்குவேஜூம் கிடையாது. அதை எல்லாம் வச்சி அவரு ரொம்ப அழகா பண்ணுனாரு. உண்மையிலேயே எனக்கு சந்தோஷம் தான். கிளைமாக்ஸ் டயத்துல மட்டும் ஒரே ஒரு அடி வாங்கினேன். ஆனா அவரு அறைஞ்சது கூட எனக்குத் தோணல.

ஆனா அவருக்கு முன்னாடியே பாண்டியன்கிட்ட நான் அறை வாங்கினேன். அவருக்கு அடிக்கவும் தெரியல. அவரு அப்போ பாண்டியனை விட்டாரு பாரு ஒரு அறை. அந்தக் கோபத்துல எனக்கு பாண்டியன் விட்டாரு அறை. காது ‘ஙொய்…’னு சத்தம் கேட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Continue Reading

More in Cinema History

To Top