மும்பையில் ராணி போல் வாழும் விஜய் பட நடிகை! இவ்ளோ பெரிய அடுக்குமாடி கட்டிடமா?
Actress Richa Pallod : ஷாஜகான் படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகை ரிச்சா பல்லோடு. யாருப்பா இந்த நடிகை என்று ஆச்சரியப்பட்டு பார்க்கும் அளவிற்கு அந்த படத்தில் மிக அழகாக தோன்றியிருந்தார் ரிச்சா. தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்த ரிச்சா பலோட் அதன் பிறகு சினிமா பக்கமே தலை காட்டவில்லை.
அந்த படத்திற்கு பிறகு சம்திங் சம்திங் படத்திலும் திரிஷாவுக்கு தோழியாக நடித்திருப்பார். ஹோம்லியான லுக்கில் பார்த்ததுமே பிடிக்கும் அளவுக்கு ஒரு அழகான நடிகையாக காணப்படுவார் ரிச்சா. இப்போது திருமணமாகி மும்பையில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறாராம். காதலித்து திருமணம் செய்து கொண்ட ரிச்சா மும்பையில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் குடியிருந்து வருகிறார் .
இதையும் படிங்க: அடுத்தது யாரு லோகேஷ் கனகராஜா?.. நடிகை ஸ்ருதிஹாசன் என்ன பதில் சொன்னாரு தெரியுமா?..
அவருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் கிட்டத்தட்ட 72 ஃப்ளோர்கள் இருக்கிறதாம். அதை சுற்றி பார்க்கவே ஒரு நாள் போதாது என்ற அளவுக்கு அவர் வீட்டைச் சுற்றி நீச்சல் குளம், தோட்டம் என ஒரு பெரிய ராணி போல வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவரை பேட்டி எடுத்தபோது அவருடைய சினிமா அனுபவத்தையும் இப்போது இருக்கும் சினிமாவைப் பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் ரிச்சா.
அது மட்டுமில்லாமல் ஷாஜகான் படத்திற்கு முன்பு அஜித்துடன் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்ததாம். அந்த படத்தில் ஒப்பந்தமும் ஆனாராம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த படம் ஆரம்பமாகவே இல்லையாம். அதேபோல் மாதவனுடன் நடிக்கும் வாய்ப்பும் ரிச்சாவுக்கு வந்திருக்கிறது. அந்த படமும் ஆரம்பிக்கப்படவே இல்லையாம்.
இதையும் படிங்க: சுந்தர் சியை சந்தோஷத்தில் ஆழ்த்திய அரண்மனை 4!.. இதுவரை இத்தனை கோடி கல்லா கட்டியிருக்கா?..
இப்படி தமிழில் ஏகப்பட்ட படங்களை தவறவிட்டதாக கூறியிருக்கிறார். மேலும் அடிப்படையில் ஒரு கிளாசிக்கல் டான்ஸரான ரிச்சா ஷாஜகான் படத்தின் போது விஜய்க்கு இணையாக டான்ஸ் ஆட வேண்டும் என்பதற்காக ஷூட்டிங் ஆரம்பிக்கும் ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வந்து அதற்காக ரிகர்சல் செய்து கொண்டிருப்பாராம். அப்பொழுதுதான் திரையில் விஜய்க்கு இணையாக தன்னுடைய டான்ஸும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி முயற்சிகளை எல்லாம் அந்த நேரத்தில் செய்ததாக ரிச்சா கூறினார்.