நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?... ஆச்சர்ய தகவல்...

by சிவா |
rohini
X

rohini

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது அம்மா நடிகையாக மாறியிருப்பவர்.

rohini

rohini

தமிழ் மட்டுமில்லாமல் ஏராளமான தெலுங்கு திரைப்படங்களிலும் ரோகிணி நடித்துள்ளார். அதோடு, பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மறைந்த நடிகர் ரகுவரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் அவரை பிரிந்து வாழ்ந்தார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். தற்போது பல திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரின் நடிப்பில் வெளியான விட்னஸ் திரைப்படம் திரைப்பட விமர்சகர்கள் பலராலும் பாராட்டப்பட்டது.

rohini

rohini

நடிகை ரோகிணி நடிப்பது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கும், பல திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். மேலும், கதாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் பல முகங்களை கொண்டவர். ஆனால், பலருக்கும் தெரியாத முகம் ஒன்று அவருக்கு இருக்கிறது. இவர் ஒரு பாடலாசிரியரும் கூட.

jalsa

கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘உனக்குள் நானே’ என்கிற பாடலை எழுதியவர் இவர்தான். அதேபோல், விஜய் நடித்த வில்லு படத்தில் ‘ஜல்சா’ பாடலை எழுதியதும் ரோகிணிதான். அதேபோல், மாயா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முன் தினம் பார்த்தேனே’ மற்றும் மாலைப்பொழுதின் மயக்கத்திலே திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவர்தான்.

இத்தனைக்கும் ரோகிணி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவரின் முழுப்பெயர் ரோகிணி மொல்லட்டி. தெலுங்குதான் இவரின் தாய்மொழி. ஆனால், தமிழ் கற்றுக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் படத்தில் நடித்ததோடு, மற்ற நடிகைகளுக்கும் குரல் கொடுத்து, பாடலும் எழுதி அசத்தியுள்ளார் ரோகிணி.

ஆச்சர்யமக இருக்கிறது அல்லவா!...

இதையும் படிங்க: ப்ப்பா!..என்னா உடம்புடா!.. தளதள உடம்ப காட்டி தவிக்கவிடும் சிருஷ்டி டாங்கே…

Next Story