அது நடக்காம போனதுக்கு விஜய்தான் காரணம்!.. மகனாவே இருந்தாலும் இப்படி சொல்லலாமா?..

தமிழ் சினிமாவில் லட்சிய இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தன் படங்களின் மூலம் தைரியமாக ஒரு காலத்தில் தட்டிக் கேட்டவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு எழுத்தாளராக , இயக்குனராக, தயாரிப்பாளராக கோலிவுட்டில் வலம் வந்தவர் தான் எஸ்.ஏ.சந்திரசேகர்.

அவர் முதன் முதலாக ஒரு பச்சை குழந்தை என்றப் படத்தின் மூலம் தாம் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த படமாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘சட்டம் ஓர் இருட்டறை ’ படம் அமைந்தது. அந்தப் படம் வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

இன்று பெரும்பாலான சட்டம் சார்ந்த படங்களுக்கு சட்டம் ஒர் இருட்டறை படத்தின் கதையும் ஒரு கருப்பொருளாகவே கருதப்படுகிறது. அந்த அளவுக்கு சட்டத்தின் சின்ன சின்ன நுணுக்கங்களை எஸ்.ஏ.சி அந்தப் படத்தில் காண்பித்திருப்பார். மேலும் இவரின் பெரும்பாலான படங்கள் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு எதிராகவே இருக்கும்.

vijay1

vijay sac

அதனாலேயே இவரை புரட்சி இயக்குனர் என்றும் அழைப்பதுண்டு. கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்கள் இவர் இயக்கியிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் இயக்கிய படங்கள் இடம்பெற்றிருக்கும்.

மேலும் சமீபகாலமாக படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார் எஸ்.ஏ.சி. கொடி, மாநாடு, டிராபிக் ராமசாமி, போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் 70 வயதைக் கடந்தாலும் இவரின் இயக்கத்தில் ஒரு படம் வெளியாக தயாராக உள்ளது. சாக்‌ஷி அகர்வால், சமுத்திரக்கனி நடிப்பில் நான் கடவுள் இல்லை என்ற பெயரில் அந்தப் படம் கூடிய சீக்கிரம் வெளியாக உள்ளது.

vijay2

vijay sac

இந்த நிலையில் சித்ரா லட்சுமணன் அஜித்தை இயக்க கூடிய வாய்ப்பு வந்ததா? இல்லை இப்ப வந்தால் இயக்குவீங்களா? என்று கேட்க அதற்கு பதிலளித்த எஸ்.ஏ.சி முன்னாடி வரவில்லை. அதுவும் பெரிய பெரிய ஹீரோக்கள் வாய்ப்பு வந்தாலும் விஜயோட அப்பா என்ற கெட்டப்பெயர் என்று சொன்னவர் அப்படியே மழுப்பலாகி விஜயோட அப்பா என்றே பயந்தார்கள்,

இதையும் படிங்க :கங்கை அமரனை விட்டுவிட்டு தனியாக சாப்பிட முடிவெடுத்த இளையராஜா… அந்த பிரபலமான ரஜினி பாடல் உருவானது இப்படித்தான்!!

எங்க நமக்கு தோல்வி படத்தை கொடுத்து விடுவாரோ என்றும் எண்ணியிருக்கின்றனர். அதனாலேயே சில படங்களின் வாய்ப்பு போயிருக்கிறது என்று கூறிவிட்டு சினிமானு வந்தால் நான் ஜெயிக்கனும் என்று தான் நான் கருதுவேன், என் மகன் என்றெல்லாம் நினைக்க மாட்டேன் என்று கூறினார். மேலும் அஜித்தை வைக்க இயக்கவதற்கு முதலில் அவர்கள் என்னை நம்பி படத்தை கொடுக்க வேண்டும் அல்லவா என்றும் அந்த பேட்டியில் கூறினார் எஸ்.ஏ.சி.

 

Related Articles

Next Story