16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவிக்கு பதிலா நடிக்கவிருந்தவர் இவரா? என்னய்யா சொல்றீங்க?..

Published on: November 27, 2023
sridevi
---Advertisement---

Bharathiraja: தமிழ் சினிமாவில் பாரதிராஜா மிக முக்கிய இயக்குனர் ஆவார். இவர் தமிழில் 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். இப்படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்திற்கு பின் பாரதிராஜ பல வெற்றிப்படங்களை கொடுத்தார். கிராம பாங்கான கதைகளின் மூலம் சினிமாவில் புதுமையை உண்டுபண்ணியவர். இவரின் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு கூட கிராமத்து வாசனை வீசும். இவர் இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்கள் இவருக்கு சிறந்த இயக்குனர் எனும் பெயரை பெற்று தந்தன.

இதையும் வாசிங்க:இது ஷூட்டிங்கா வேற ஏதுமா?!.. சுந்தர். சி-யிடம் வேற மாதிரி கோபப்பட்ட ரஜினி…

இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். படைவீரன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை மிகச்சிறப்பாக வெளிக்காட்டினார்.

பல்வேறு கதாநாயகிகளை திரையில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவரை சேரும். இவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார். ஆனால் இப்படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு பதிலாக முதலில் நடிகை ரோஜா ரமணியைதான் தேர்வு செய்தார்களாம்.

இதையும் வாசிங்க:அமீருக்கு ஓகே சொன்ன விஜய்… இருந்தும் டேக் ஆஃப் ஆகாததற்கு காரணம் என்ன தெரியுமா?…

ரோஜா ரமணி செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். அப்போது அவர் தமிழ் சினிமாவிற்கு புதுமுகம் என்பதால் பாரதிராஜாவின் நண்பர்களும் விநியோகஸ்தரர்களும் படத்தில் அனைவருமே புதுமுகமாக இருந்தால் படம் எப்படி விற்பனையாகும் என கேட்டுள்ளனர்.

பின் நண்பர்களின் யோசனையை பெற்ற பாரதிராஜா அப்படத்தில் அனைவருக்கும் தெரிந்த முகமான ஸ்ரீதேவியை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. குறைந்த பட்ஜெட்டிலேயே உருவாக்கப்பட்ட இப்படம் வசூலில் முதலீட்டு தொகையையே மிஞ்சியதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.