Connect with us
rajinikanth

Cinema History

இது ஷூட்டிங்கா வேற ஏதுமா?!.. சுந்தர். சி-யிடம் வேற மாதிரி கோபப்பட்ட ரஜினி…

Rajinikanth: தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து கொண்டிருந்த ரஜினி பின் பைரவி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.

பின் தொடர்ந்து பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் நடித்த அண்ணாமலை அருணாச்சலம் போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.

இதையும் வாசிங்க:டப்பிங்கிற்கு வர மறுத்த பிரியாமணி… காண்டான அமீர்.. அதுக்காக இப்படியா சார் பண்ணுவீங்க!

ரஜினிகாந்த் பொதுவாக ஒரு குணம் கொண்டவர். எந்தவொரு படத்திலும் இவர் கூறும் ஆலோசனை சரியாக இருக்குமாம். அப்படிதான் அருணாச்சலம் படத்தில் வரும் மார்த்தாடு மார்த்தாடு பாடலின்போது பின்புறமாக ஆடும் கலைஞர்களை சரிகட்ட அப்பாடலின் நடன ஆசிரியருக்கு மிகவும் சிரமமாக இருந்ததாம்.

அப்போது ரஜினியிடம் அத்தகவலை சொன்னாராம் பிருந்தா மாஸ்டர். அப்போது ரஜினி ஒரு யோசனை கூறினாராம். அவர்கள் அனைவரும் அவ்வாறு நடந்து கொள்ளும்போது நீங்கள் ரஜினி சார் அடுத்து நீங்க வாங்க என கூறுங்கள்… அனைவரும் உடனே ஒழுங்காக நடனமாடுவார்கள். பிருந்தாவும் அதுபடியே செய்துதான் அப்பாடலை எடுத்தாராம்.

இதையும் வாசிங்க:இந்தியன் 2 படத்தில் சித்தார்த் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவரா..?  இது என்ன புதுக்கதை?

பின் இப்படத்தில் இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. இப்படத்தின் இயக்குனரான சுந்தர்.சி ஒரு நாள் காலை 9.30 மணிக்கு படபிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனராம். ஆனால் அன்றைக்கு ரஜினியோ 11 மணி படபிடிப்பிற்கு 9.30 மணிக்கே வந்துவிட்டாராம்.

அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். அப்போது ரஜினியோ ‘எனக்கும் கிரிக்கெட் விளையாட தெரியும். நானும் வரவா… பேட்டிங்கா இல்லைனா பெளலிங்கா?’ என கேட்டுள்ளார். ஆனால் அவரது பேச்சுக்குபின் ஒரு கோபமும் இருந்துள்ளது. படப்பிடிப்பு நேரத்தில் விளையாடுவது தவறு என்பது அவரது பார்வையிலே வெளிப்பட்டதாம். இவ்வாறு பேட்டி ஒன்றில் சுந்தர்.சி தெரிவித்திருந்தார்.

இதையும் வாசிங்க:பருத்திவீரன் படத்துக்காக இவ்வளவு கஷ்டமா?!.. பாத்து பாத்து செய்த இயக்குனர் அமீர்!..

google news
Continue Reading

More in Cinema History

To Top