இந்தியன் 2 படத்தில் சித்தார்த் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இவரா..?  இது என்ன புதுக்கதை?

கேம் சேஞ்சர், இந்தியன் 2 என பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருப்பவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். விசாகப்பட்டினம், சென்னை என பறந்து பறந்து இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். தற்போது திடீரென மைசூருக்குப் போய் விட்டார். அங்கு போய் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறாராம். அங்கே எல்லாம் ஹெலிகாப்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

2 மெகா புராஜெக்ட்டை அடுத்தடுத்து பண்ணுவது ரொம்பவே சிரமம். அதற்கு கடின உழைப்பைக் கொடுத்து வருகிறார் இயக்குனர் ஷங்கர். இந்தியன் 2 படத்துல சித்தார்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அந்தக் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் சிவகார்த்திகேயன். அவரை மனதில் வைத்துத் தான் ஷங்கர் பல காட்சிகளை எழுதினாராம். டிஷ்கசனிலும் பேசி உள்ளார்.

SJS, Kamal

கடைசி நேரத்துல ஏதோ ஒரு காரணத்துக்காக சிவகார்த்திகேயனை வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அந்த இடத்துல சித்தார்த்தை நடிக்க வச்சாங்க. இந்தியன் படத்தில் எவ்வளவு மெனக்கெடல்கள் இருந்ததோ அதை விட டபுள் மடங்கு மெனக்கெடல்களை தற்போது படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.

படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பு செம மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இவரது நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. கமலுடன் முதன் முதலாகக் கைகோர்த்திருப்பதால் எஸ்.ஜே.சூர்யா - கமல் காம்போவுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா இந்தக் கூட்டணி என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

SK

கமல், எஸ்.ஜே.சூர்யா, காஜல், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, குரு சோம சுந்தரம் உள்பட பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது. முதல் பாகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இசை இருக்குமா என்ற சந்தேகம் வந்தது. அதை அனிருத் பூர்த்தி செய்வார் என்பது அடுத்தடுத்த பாடல்களைக் கேட்கும்போது தான் தெரியவரும்.

 

Related Articles

Next Story