ஆஸ்கருக்கு செல்லும் சாய் பல்லவி.! உங்க ஆட்டத்திற்கு விருது கொடுத்தே ஆகணும்.!

by Manikandan |
sai pallavi
X

நானி நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்". இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் என்பவர் இயக்கி இருந்தார்.

Shyam Singha Roy

மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் கடந்த 2021 ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்களேன்- இந்த வயசுலயும் அந்த ஆசை விடலையா.? சரத்குமாரின் பேராசை இதுதான்.!

Shyam Singha Roy

இந்நிலையில் "ஷியாம் சிங்கா ராய்" திரைப்படம் 3 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

sai pallavi

படத்தில் நடிகை சாய்பலவ்வி மிகவும் அருமையாக பரதநாட்டியம் ஆடியிருப்பார். பொதுவாகவே சாய் பல்லவி மிகவும் அருமையாக நடனமாடக்கூடியவர் என்பது அனைவர்க்கும் தெரியும். குறிப்பாக மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த ரௌடி பேபி பாடலிலும் அருமையாக நடித்திருப்பார்.

sai pallavi

அதைப்போல, "ஷியாம் சிங்கா ராய்" படத்தில் அவர் கலாச்சார நடனம் ஆடியிருந்ததால், ஆஸ்கர் விருதுக்கு கலாச்சார நடனப்பிரிவிக்கு இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Next Story