நைட் அங்க போக சொல்வாங்க! எனக்கு நடந்த கொடுமை! அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகை தகவல்

அட்ஜஸ்ட்மென்ட் இந்த வார்த்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. எல்லாத் துறைகளிலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் மட்டும் தான். அதுவும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். மிகப்பெரிய கனவுகளோடு சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் வரும் பெண்களுக்கு தடையாக இருப்பதே இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை தான்.

சரி ஒரு பப்ளிசிட்டி வேண்டும்.அதற்காக இதை எல்லாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் இந்த அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு அங்கத்தில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால் சில பெண்கள் இப்படித்தான் அட்ஜஸ்ட்மென்ட் செய்து நாம் சாதிக்க வேண்டும் என்றால் அப்படி ஒன்றும் அவசியமே இல்லை என்று அதை தூக்கி எறிந்து விடும் பெண்களும் இருக்கிறார்கள்.

sara

sara

அட்ஜஸ்ட்மென்ட் என்ற இந்த வார்த்தை அதிகமாக பகிரப்படுவது சினிமாவில். ஒரு நடிகையாக வேண்டும் என்று பல கனவுகளோடு தன்னுடைய வீட்டையும் எதிர்த்து வெளியே தங்கி வாய்ப்புகளைத் தேடி வரும் பெண்கள் இதில் சிக்கி சின்னா பின்னமாகி விடும் செய்தியை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் நடிகை சாரா அட்ஜஸ்ட்மென்ட் குறித்து மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார்.

அதாவது ஒரு ஒரு ஆண் நடிகராக வேண்டுமென்றால் பணம் கேட்பார்கள். அதே ஒரு பெண் நடிகையாக வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் தான் கேட்கிறார்கள் என்று சாரா கூறியிருக்கிறார் .இவர் ஆரம்பத்தில் ஒரு விஜேவாக இருந்து சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் தான் சாரா. ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவரிடமே எத்தனையோ பெண்கள் வாய்ப்பு கேட்டு வருவார்களாம். அவர்களிடம் இவர் சொல்லும் அட்வைஸ்" நீ சினிமாவிற்குள் வந்தால் கிளாமர் பண்ணனும் ,டேட் போகணும் ,நைட் பப் இதெல்லாம் போகணும், என்ன நடிக்க சொன்னாலும் அதை நடித்துக் கொடுக்க வேண்டும். இதை எல்லாம் தாண்டி தான் நீ சினிமாவில் ஒரு இடத்தை அடைய முடியும். இதை என்னால் முடியாது என்று நீ சொன்னால் ஒழுங்காக படித்து அதற்கேற்ற வேலையை பாரு" என்று அட்வைஸ் சொல்வாராம்.

இதையும் படிங்க : நானும் சித்ராவும் எப்படி தெரியுமா? 10 வருஷ லவ்! போட்டோலாம் இருக்கு – யாருப்பா இவரு?

மேலும் நான் சேலை கட்டிக்கொண்டு மட்டும்தான் நடிப்பேன் என்று சொன்னால் அது சரி வராது .நடிக்க வேண்டும் என்று வந்துவிட்டால் அவர்கள் சொல்லும் எந்த கதாபாத்திரம் ஆனாலும் நடித்துதான் ஆக வேண்டும். விபச்சாரம் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க சொல்வார்கள் .நடிக்க வேண்டும். தகாத உறவில் இருக்கும் மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க சொல்லுவார்கள் .அதையும் நடித்து தான் ஆக வேண்டும். அரைகுறை ஆடையில் நடிக்க சொல்லுவார்கள். அதையும் நடித்து தான் ஆக வேண்டும். இவற்றை எல்லாம் கிராஸ் பண்ணி தான் வர வேண்டும் என்று கூறினார்.

இல்லை விருப்பமில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளலாம் .எல்லாம் நம் மனதை பொறுத்து தான் இருக்கிறது என்று கூறினார் .மேலும் இவரையும் ஆரம்பத்தில் குட்டை பாவாடை அணிந்து ஐட்டம் பாடல் எல்லாம் செய்ய சொன்னார்களாம். அதை எல்லாம் கிராஸ் பண்ணி தான் வந்திருக்கிறாராம். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு அதை எல்லாம் செய்ய மறுத்திருக்கிறார். அதனால் அவருக்கு வந்த வாய்ப்புகள் எல்லாம் பறிபோய் விட்டதாம். அதனால் எல்லாமே நம்மளுடைய எண்ணத்தில் தான் இருக்கிறது என்று சாரா கூறினார்.

 

Related Articles

Next Story