கர்ப்பிணி நடிகையை இப்படியா துன்புறுத்துவது? சரிதா சொல்வதைக் கேட்டால் மனம் பதைக்குதே..!
தற்போது மலையாளத் திரையுலகமே பாலியல் குற்றச்சாட்டுகளால் ஸ்தம்பித்து நிற்கிறது. நடிகர் சங்க அமைப்பான அம்மாவில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறிய நிலையில் பலரும் இந்தக் குற்றச்சாட்டுகளை விமர்சனம் செய்து வருகின்றனர்.
மோகன்லால் மலையாளத் திரையுலகில் இந்த ஒரு சங்கம் மட்டும் தான் இருக்குதா? இன்னும் 21 சங்கங்கள் இருக்கு. அதே போல இன்னும் பல துறைகளிலும் இதுபோன்ற பாலியல் புகார்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் நடிகை சரிதாவும் தன் முன்னாள் கணவர் குறித்து குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
Also read: நாக சைதன்யா அம்மா இதனால்தான் நிச்சயத்துக்கு வரலையாம்! தங்கம்தான் நீங்க…
நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் தான் முகேஷ். இவரைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே அவரைப் பற்றி சரிதா இப்படி பேசியுள்ளார்.
முகேஷ் ஒழுக்கமற்றவர். பெண்களுக்கு துளியளவு கூட மரியாதைக் கொடுக்காதவர். திருமணமாகி வாழ்ந்து வந்த போது அவரது தந்தையின் கண்முன்னே சரிதாவை அடித்துத் துன்புறுத்தினாராம். தனக்கு நடந்த கொடுமைகளை எல்லாம் பிள்ளைகள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களை போர்டிங் ஸ்கூலில் சேர்த்து இருந்தாராம் சரிதா.
அவருடன் தொடர்பில் இருந்த பெண்களை எல்லாம் வீட்டிற்கே அழைத்து வருவாராம் முகேஷ். அது மட்டுமல்லாமல் கர்ப்பகாலத்தில் வயிற்றில் அடித்ததாகவும், இதனால் சினிமா கேரியரை மட்டுமல்லாமல் மொத்த வாழ்க்கையையும் இழந்ததாக வேதனையுடன் கூறி உள்ளார்.
சரிதாவுடன் விவாகரத்து ஆனதும் மெதில் தேவிகா என்ற நடனக்கலைஞரை முகேஷ் திருமணம் செய்து கொண்டார். இருவரும் 2001ல் பிரிந்தனர். ஹேமாகமிட்டிக்குப் பின் நடிகை மினு முகேஷ் மீது புகார் கொடுத்தார்.
கேரள நடிகர் சங்கத்தில் பெயர் சேர்க்க தன்னிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என முகேஷ் கேட்டதாக நடிகை மினு குற்றம்சாட்டினார். இதனை அடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Also read: கேமியோ ரோல் தேவையா? அது திணிக்கப்படுகிறதா? இதென்ன புது கலாச்சாரம்?
இந்த நிலையில் முகேஷ் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். நடிகை மினு தன் மீது பொய்யாக குற்றம் சுமத்தியதாகவும், அது மட்டுமல்லாமல் தன்னிடம் அது குறித்த வாட்சப் தகவல்கள் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இச்சூழலில் நடிகை சரிதாவின் பழைய பேட்டி வைரலாகி வருகிறது.