Connect with us
savi_main_cine

Cinema History

நடிப்பில் சிவாஜிக்கு இணையாக போற்றப்பட்டவர்!…சாவித்ரியை சகலகலாவள்ளியாக சித்தரித்த 5 திரைப்படங்கள்!..

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நடிப்பு தான் இவர் மூச்சு, நடிப்பு அரக்கன், நடிப்பு வெறியன், என்று சதா சினிமாவே கதி என்று இருந்தவர் தான் சிவாஜி. சிவாஜியின் நடிப்பிற்கு ஈடாகுமா? என்று சொல்லுமளவிற்கு அவரின் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது.

savi1_cine

savithiri

அப்படி இருந்த சிவாஜிக்கு போட்டியாக நடிகைகளில் புகழ் பெற்றவர் தான் சாவித்ரி. இவரை நடிகையர் திலகம் என்று போற்றி வந்தனர். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சாவித்ரி. அப்படி பட்ட நடிப்பை வெளிப்படுத்திய சாவித்ரியின் நடிப்பில் வெளிவந்த சிறந்த 5 படங்களை பற்றி தான் பார்க்க போகிறோம்.

1. மாயாபஜார்- தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளிவந்த இந்த படம் அதிக பொருட்செலவில்  எடுக்கப்பட்ட படமாகும். படம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கியது. மேலும் இந்த படத்தில் சாவித்ரி, ரெங்காராவி, ஜெமினி, நம்பியார் என பல நடிகர்கள் நடித்திருக்கும் இந்த படத்தில் சாவித்ரியின் நடிப்பு பாராட்டக்குரியதாக இருக்கும்.

savi2_cine

savithiri

2. களத்தூர் கண்ணம்மா – கணவன் மனைவி இரண்டு பேரும் நடித்திருக்கும் இந்த படம் அந்த நேரத்தில் ஜெமினி சாவித்ரிக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் வந்த போதிலும் அந்த பாதிப்பு இந்த படத்தில் துளி கூட தெரியாமல் நடித்திருந்தனர். சிறந்த கணவன் மனைவிக்கு உதாரணமாக களத்தூர் கண்ணம்மா படம் விளங்கியது. 1960 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

savi3_cine

savithiri

3. பாசமலர் – அண்ணன் தங்கைக்கு உதாரணமாக பாசமலர் படம் அமைந்தது. நடிப்பிற்கு இலக்கணமாக இருக்கும் சிவாஜி மற்றும் சாவித்ரி இருவரும் இணைந்து நடித்த இந்த படமும் நல்ல வெற்றியை பதிவு செய்தது. கலவையான க்ளைமாக்ஸால் ரசிகர்களை அழவைத்து பாசமலர் திரைப்படம். காலப்போக்கில் இந்த படத்தை தழுவி தமிழ் சினிமாவில் ஏராளமான அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து பல படங்கள் வெளியானது.

savi4_cine

savithiri

4.பாவமன்னிப்பு – மத நல்லிணக்கத்தை கருப்பொருளாக கொண்டு விளங்கிய இந்த படத்தில் கடினமான வசனங்களுடன் உரையாடல்களுடன் வெளிவந்தது. இருந்தாலும் சாவித்ரியின் நடிப்பு மிகவும் அருமையாக இருந்தது. இந்தப் படமும் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றது.

savi5_cine

savithiri

5. நவராத்திரி – ஏ.பி. நாகராஜன் இயக்கிய நவராத்திரி படம் சிவாஜிக்கு 100வது படமாக அமைந்தது. இந்த படத்தில் சிவாஜி 9 வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். கதைப்படி திருமணச்சண்டையால் வீட்டை விட்டு வெளியேறும் சாவித்ரி 9 வேடங்களில் நடிக்கும் சிவாஜியிடம் சிக்கி சமாளிக்கும் கதை தான் நவராத்திரி திரைப்படம். சிவாஜியின் நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சாவித்ரியின் நடிப்பு இந்த படத்தில் பெரிதும் பாராட்டப்பட்டது.

savi6_cine

savithiri

google news
Continue Reading

More in Cinema History

To Top