கைய வச்சு பாரு.. யார கேட்டு இந்த டைட்டில் வச்ச? இயக்குனரை பாடாய் படுத்திய ஷகீலா..
Actress Shakeela: மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோயினாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை ஷகீலா. க்ளாமர் படங்களின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஷகீலா தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்தவர். இப்போதும் ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இவர் டாப் ஹீரோயினாக இருந்த சமயத்தில் மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் சிரஞ்சீவி படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது எல்லா திரையரங்குகளிலும் ஷகீலா நடித்த படங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. அந்தளவுக்கு ஒரு ஆளுமை மிக்க ஹீரோயினாகவே வலம் வந்திருக்கிறார் ஷகீலா.
இதையும் படிங்க: புற்றுநோயால் குரலை இழந்த பவதாரிணி!.. இசைஞானிக்கு இப்படி ஒரு சோகமா!..
அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஷகீலாவை காண முடிந்தது. ஷகீலா என்றாலே இப்படித்தான் என்ற ஒரு தவறான மன நிலையை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றியது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஷகீலாவை அம்மா என்றே அழைக்க தொடங்கினார்கள்.
அதன் பிறகு தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டு ஒரு கட்டத்திற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாமல் திரும்பி வந்தார் ஷகீலா. இந்த நிலையில் சமீபத்தில் அவரை அவருடைய வளர்ப்பு மகள் அடித்துவிட்டதாகவும் இருவருக்குள்ளும் காரசாரமான சண்டை நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இதையும் படிங்க: தோல்வியில் முடிந்த காதல் திருமணம்!.. பவதாரிணி வாழ்வில் நடந்த சோகம்..
இதைப் பற்றி நேற்று நடந்த ‘இனிமே நாங்கதான்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஷகீலா பேசினார். என்னைப் பற்றி சமீபகாலமாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. என்னை யாரோ அடித்துவிட்டார்கள் என்றும் ஷகீலாவால் நடக்க முடியவில்லை என்றும் ஏகப்பட்ட செய்திகள் வெளிவருகின்றது. என் மேல் கைய வைக்க முடியுமா? இந்த ஷகீலாவைத்தான் அடிக்க முடியுமா? ஏன் அப்படி எழுதுகிறீர்கள் என தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் இனிமே நாங்கதான் பட இயக்குனரான பிரபாகரனை அருகில் அழைத்து அவர் தோளின் மீது ஷகீலா கைப் போட்டுக் கொண்டு ‘இந்த டைட்டிலை ஏன் வச்ச? எப்படி வச்ச? இந்த டைட்டில் வெளியானதில் இருந்து என்னை நெட்டிசன்கள் ஐந்து நாளாக வச்சு செய்கிறார்கள்’ என கிண்டலாக கேட்டார் ஷகீலா. இந்த படத்தில் ஒரு முக்கியமான ஒரு கேரக்டரில் ஷகீலா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வதந்திக்குனு ஒரு அளவு வேணாமாடா? அஜித் லைன் அப்பில் இருக்கிறது இதுதான்..என்னெல்லாம் உருட்டுராங்க