Actress Shalini: தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திர தம்பதிகள் இருக்கின்றனர். படங்களில் ஜோடியாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய ஏராளமான பிரபலங்கள் இருக்கின்றனர். இவர்கள் வரிசையில் ஒரே ஒரு படத்தில் ஜோடியாக நடித்து பின் இன்றுவரை மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஜோடி யார் என்றால் அஜித் – ஷாலினிதான்.
ஷாலினியை பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோயினாக அறிமுகமான பிறகு 5 வருடங்களில் 12 படங்களில் தான் நடித்தார்.
இதையும் படிங்க: உயிருக்கே உலை வைக்க இருந்த முரட்டுக்காளை திரைப்படம்… ஒரு நொடியில் சுதாரித்த ரஜினிகாந்த்!…
அதன் பின் காதல் கணவரான அஜித்தை கரம் பிடித்தார். இப்போது ஒரு பொறுப்புள்ள குடும்ப பெண்மணியாக குடும்பத்தையும் குழந்தையையும் கவனித்து வருகிறார் ஷாலினி. இதற்கிடையில் இன்ஸ்டாவில் தனக்கென ஒரு பக்கத்தை ஆரம்பித்த ஷாலினி அதில் அஜித்தும் அவரும் இருக்கிறமாதிரியான பல புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்துவருகிறார்.
இந்த நிலையில் ஷாலினி ஹீரோயினாக அறிமுகமான முதல் படம் ‘அனியத்திப்ரவு’ . அந்த படத்தை பாசில் இயக்கியிருந்தார். இதே படம்தான் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற தலைப்பில் வெளியானது. தமிழிலும் பாசில்தான் இயக்கியிருந்தார்.
இதையும் படிங்க: ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பார் போலயே? விவகாரத்துக்கான காரணம் பற்றி மனம் திறந்த சரத்குமாரின் முதல் மனைவி
அதே போல் மலையாளத்தில் ஷாலினி நடித்த கடைசி படம் ‘ நிறம்’. இந்தப் படம் தான் பின்னாளில் பிரியாத வரம் வேண்டும் என்ற தலைப்பில் தமிழில் வெளியானது. இந்த இருபடங்களையும் எடுத்தவர் இயக்குனர் கமல்.
இப்படி ஷாலினியின் முதல் கடைசி படங்களை தமிழிலும் மலையாளத்திலும் இயக்கியவர்கள் ஒரே இயக்குனர் என்பது வேறு எந்த நடிகைக்கும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…