33 வருஷம் கழிச்சு ரி எண்ட்ரி ஆகும் செண்பகம்! அப்ப விட்டத இப்ப பிடிப்பேன்! விஜய், அஜித் எல்லாம் ரெடியா இருங்க
Actress Shanthipriya: கங்கை அமரனால் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். நடிகை சாந்திபிரியா. 80ஸ், 90ஸ் எல்லாம் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத ஒரு நடிகையாக இருந்தவர்தான் சாந்திபிரியா. எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தின் மூலம் ராமராஜனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இன்றளவும் நம் நினைவுகளில் கலந்த ஒரு நடிகைதான் இவர். நடிகை பானுப்ரியாவின் உடன் பிறந்த சகோதரி. கிட்டத்தட்ட 33 வருடங்கள் கழித்து இப்போது கோலிவுட்டில் களமிறங்குகிறார். அதுவும் வெற்றிமாறன் ப்ரடக்ஷனில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறாராம்.
இதையும் படிங்க: விருந்து வைத்து வடிவேலுவை பாராட்டிய நடிகர் திலகம்!.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…
இவர் ஹீரொயினாக நடித்த காலத்தில் ராமராஜன், பிரபு, கார்த்திக், அர்ஜூன், விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் தான் ஜோடியாக நடித்தாராம். ரஜினி, கமல் இவர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அமையவில்லையாம். அந்த நேரத்தில் திருமணமாகி மும்பையில் செட்டிலானதால் என்னால் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.
தமிழை தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறாராம். இவருடைய கணவர் திருமணமாகி சிறிது ஆண்டுகளுக்குள்ளாகவே இறந்துபோக அவருடைய இரு மகன்களை சிங்கிள் பேரண்டாக இவர்தான் கவனித்து வருகிறாராம். தற்போது 27 வயதில் ஒரு மகனும் 24 வயதில் இன்னொரு மகனும் இருக்கிறாராம்.
இதையும் படிங்க: டீன் ஏஜ் வயதினரையும் கவர்ந்து இழுத்த சிவாஜியின் அந்த மேனரிசங்கள்!. எதைச் சொல்கிறார் ஜெயசித்ரா?..
அதனால் இதுதான் சரியான நேரம் என கருதி மீண்டும் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ரஜினி, கமல் இவர்களுடன் எல்லாம் நடிக்க முடியவில்லை என்ற வருத்தம் இப்பொழுது வரைக்கும் இருக்கிறது என்றும் இனி எல்லா நடிகர்களுடன் நடிக்க போகிறேன் என்றும் கூறி அஜித், விஜய், கார்த்தி, சூர்யா இவர்களுடன் சேர்ந்து கண்டிப்பாக நடிக்க போகிறேன் என்றும் அவரது ஆசையை கூறினார்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms