விருந்து வைத்து வடிவேலுவை பாராட்டிய நடிகர் திலகம்!.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!...

Vadivelu: மதுரையிலிருந்து சினிமா ஆசையில் கோலிவுட்டுக்கு வந்த பல பிரபலங்களில் வடிவேலுவும் ஒருவர். ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு விஜயகாந்தால் சினிமாவில் வளர்ந்தவர் இவர். சின்னக்கவுண்டர் படம் முதல் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்டார் விஜயகாந்த்.

ஒருபக்கம் கமலின் பார்வை இவர் மீது விழுந்து சிங்காரவேலன், தேவர் மகன் ஆகிய படங்களில் நடித்தார் வடிவேலு. தேவர் மகன் படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுவுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாகவே பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு.

இதையும் படிங்க: டீன் ஏஜ் வயதினரையும் கவர்ந்து இழுத்த சிவாஜியின் அந்த மேனரிசங்கள்!. எதைச் சொல்கிறார் ஜெயசித்ரா?..

இந்த படப்பிடிப்பில் வடிவேலுவின் நடிப்பை நடிகர் திலகமே பாராட்டினார். ஏனெனில், இந்த படத்தில் நல்ல குணச்சித்திர வேடத்தில் வடிவேலு நடித்திருப்பார். அப்படத்திற்கு பின் தொடர்ந்து பல வருடங்கள், பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் வடிவேலு.

கவுண்டமணியின் மார்க்கெட் இறங்கிபோக அந்த இடத்தை பிடித்தார் வடிவேலு. 20 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் காமெடி நடிகராக கோலோச்சி ரசிகர்களை சிரிக்க வைத்தார். வடிவேலு. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உருவானது. இப்போதும் வடிவேலுவின் முகபாவணைகளும் வசனங்களும்தான் மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!

தேவர் மகன் படம் வெளியானபின் நடிகர் திலகம் சிவாஜி அந்த படத்தில் பணிபுரிந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார். அப்போது வடிவேலுவை தனியே அழைத்து ‘இந்த படத்துல நீ நல்லா நடிச்சிருக்க.. உன்னோட குரல் உனக்கு பெரிய பிளஸ்.. கண்டிப்பா நீ பெரிய அளவுக்கு வருவே’ என பாராட்டினாராம்

இதை பலமுறை ஊடகங்களில் சொன்ன வடிவேலு ‘நடிகர் திலகமே என்னை பாராட்டியதை மறக்க முடியாது. அதை விட எனக்கு வேறு என்ன விருது வேண்டும்’ என நெகிழ்கிறார்.

 

Related Articles

Next Story