Cinema News
மோகன்லால் சான்ஸ் கொடுக்கலன்னு போட்டுக் கொடுத்துருப்பாங்க… என்ன சொல்றாங்க ஷர்மிளா?
மலையாளத் திரை உலகில் அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது ஹேமா கமிட்டி. பல பிரபலங்கள் இதைப் பற்றித்தான் வலைதளங்கள் முழுவதும் விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். மலையாளத் திரை உலக நடிகர் சங்க நிர்வாகிகளே கூண்டோடு கலைந்து விட்டனர்.
அந்த வகையில் அதன் தலைவர் மோகன்லாலுமா என்றெல்லாம் பேச்சு எழுந்தது. அந்த வகையில் பிரபல நடிகை ஷர்மிளா என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
எங்க காலத்துல நாங்களே எங்க சேஃப்டியைப் பார்த்துக்கணும். பெண்கள்கிட்டேயே பயப்படாம நாம சொல்ல முடியுது. அதனால இது இப்ப உள்ள பெண்களுக்கு வரப்பிரசாதம்.
Also read: நீங்க நடிச்சா போதும்… இந்த கிளாமர் ஆசை வேறையா? பிரியா பவானி சங்கர் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்
ஒரு கம்பெனிக்குப் போறதுக்கு முன்னாடியே நான் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா இல்லையான்னு வெரிஃபை பண்ணிடுவேன். மோகன்லால் சாரை என்னோட டேடிக்கு அறிமுகப்படுத்துனது அவரோட மாமனார். 13 வருஷம் அவரோட ஹீரோயினா நடிச்சிருக்கேன்.
எங்கிட்ட கலகலன்னு பேசுவாரு. நல்ல அரட்டை அடிப்பாரு. நான் தான் மலையாளம் சரியா வராது. கொஞ்சம் தயங்குவேன். அவரு, நெடுமுடிவேணு எல்லாம் எனக்கு தமிழ் தெரியும். இங்க வந்து உட்காரு. நாம பேசுவோம்னு சொல்வாரு.
ஒரு ஹீரோன்னா நிறைய பொண்ணுங்களுக்கே அவர் மேல கண்ணு இருக்கும். அவரு கூட சேர்ந்து ஹீரோயினா நடிக்க முடியலைன்னு ஆத்திரத்துல போட்டுக் கொடுக்கலாம். நிறைய பேரு அவரு கூட வாழணும்னு ஆசைப்பட்டு இருக்கலாம்.
என்ன வேணாலும் நடக்கலாம். ஒரு பெரிய ஹீரோ மேல கம்ப்ளைண்ட் வரும்போது நான் அதை இப்படித் தான் பார்க்குறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Also read: மம்மூட்டி வச்சு வொர்க் அவுட் ஆகல.. நயன் வந்ததும் ஹைப் ஏறிருச்சு! அதான் லேடி சூப்பர்ஸ்டார்
மலையாளத் திரை உலகில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் 17 பேர் ராஜினாமா செய்தாங்க. அதுக்கு என்ன காரணம்னு நடிகை விசித்ராவும் பேசியிருந்தார். அது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அவர் சீனியர் நடிகர். அவரிடம் யாராவது உதவி கேட்கலாம். அவரால் யாரையும் காப்பாற்றவும் முடியாது. அது அவருக்கு ஒரு தர்மசங்கடமான நிலையை உருவாக்கலாம். அதனால்தான் அவரும் பதவி விலகி இருக்கிறார் என்று பேசியிருந்தார்.