நடுக்கடலில் வித்தியாசமான முறையில் திருமணம்! ஒரே வரியில் திருமண உறவை முறித்த நடிகை

Published on: December 2, 2023
sheela
---Advertisement---

Actress Sheela:  தமிழ் சினிமாவில் அழகையும் தாண்டி சமீபகாலமாக திறமைக்கு உரிய மரியாதை கிடைத்து வருகிறது. அப்படிப்பட்ட நடிகைகளை இப்போது ஏராளமான படங்களில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் திரௌபதி மற்றும் மண்டேலா போன்ற படங்களில் நடித்த நடிகை ஷீலா ராஜகுமார்.

இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண உறவில் இருந்து விலகுகிறேன் என்ற ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. அதுவும் கடலுக்கு நடுவே வித்தியாசமான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இதையும் படிங்க: பிரதீப் ரவீனாவிடம் சொன்ன அந்த வார்த்தை! ரெட் கார்டு கொடுத்ததை பற்றி அக்‌ஷயா சொன்ன பளீச் உண்மை

முற்றிலும் காதல் திருமணமாக  அமைந்தது.  நாளைய இயக்குனரில் போட்டியாளராக பங்கேற்ற தம்பி சோழர் என்பவரைத்தான் இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு குறும்படத்தில் நடிக்கும் போதுதான் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

ஆனால் இவர்களின் திருமணத்திற்கு இவர்கள் இருவர் வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதையும் மீறி இவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இப்போது அந்த திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தது ஏன் என்றுதான் தெரியவில்லை.அதற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்க வில்லை.

இதையும் படிங்க: தலைவர் பங்கம் பண்ணுறாருப்பா.. தலைவர்170 டைட்டில் முதல் ஷூட்டிங் வரை… லேட்டஸ்ட் அப்டேட் இதான்..!

இவர் சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா 2, பிச்சைக்காரன் 2, ஜோதி, நூடுல்ஸ் போன்ற பல படங்களில் நடித்து தன் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வரும் நடிகையாகவும் ஷீலா திகழ்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.