பாரதிராஜா படத்தில நடிக்கறது எவ்ளோ பெரிய விஷயம்..! ஷோபனா மறுக்க என்ன காரணம்?

bharathiraja shobana
கிராமத்துக் கதைகளை மண்ணின் மணம் மாறாமல் ரம்மியமாக எடுப்பவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. இவர் 80களில் தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்தார். இவரது படத்தில் நடிக்க பலரும் ஏங்கிய காலம் அது. ஆனால் நடிகை ஷோபனாவைத் தேடி வாய்ப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார். என்ன காரணம்னு பார்ப்போமா...
5 வெள்ளிவிழா படங்கள்
Also read: Jyothika: கை கொடுக்க ஓடி வந்த ரசிகை.. ஜோதிகாவின் ரியாக்ஷன்! திருப்பதியில் நடந்த சம்பவம்
கமல் நடித்த 'பதினாறு வயதினிலே' படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு. அவர் பாலசந்தருக்கு சவால் விடும் டைரக்டர்னு பாரதிராஜாவைப் புகழ்ந்தார். கவுண்டமணி, சுதாகர், பாக்கியராஜ், ரஜினி, விஜயன் என்று பலரை அறிமுகப்படுத்தினார். அறிமுகமானதில் இருந்து 5 வெள்ளிவிழா படங்களைக் கொடுத்தார் பாரதிராஜா.
அதைத் தொடர்ந்து 'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தொடங்கினார். அப்போது 5000 ரூபாய் கொடுத்து 'என்னோட அடுத்த படத்துக்கு நீங்க தான் இயக்குனர். இதை அட்வான்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்' என்று கொடுத்தேன்.
'படம் வெளியாகி வெற்றி பெறட்டும் பார்க்கலாம்' என்றார். கார்த்திக், ராதா, தியாகராஜன் மட்டுமல்ல. எனக்கும் அலைகள் ஓய்வதில்லை தான் முதல் படம். அதுல தான் நான் முதன்முறையாக இணைந்தேன் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். தொடர்ந்து அவர் என்ன சொல்றாருன்னு பாருங்க.
மண்வாசனை

manvasanai
அலைகள் ஓய்வதில்லை படமும் மாபெரும் வெற்றி பெற்றது. டிக் டிக் டிக், வாலிபமே வா வா ஆகிய படங்களை இயக்கினார். அப்படி பத்து படங்களை இயக்கி விட்டார். மண்வாசனை படத்துக்காக அவரிடம் 40 நாள் கால்ஷீட் வாங்கி வைத்து இருந்தேன். ராதாவுக்கு ஜோடியா அந்தப் படத்தில் சிவகுமாரை நடிக்க வைக்கலாம்னு நினைத்தேன்.
ஆனால் அந்தப் படத்தில் மொத்தமாகப் புதுமுகங்களையே நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். பத்மினிக்கு உறவுப் பெண்ணாக ஷோபனா இருக்கிறார். அவரையே நடிக்க வைக்கலாம் என்று நண்பர் சொன்னார். அவரும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
விலகிய ஷோபனா
அந்த செய்தியைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்து விட்டோம். பம்பாயில் ஒரு இந்திப்படம். அங்கு சென்று விட்டோம். அங்கு படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியபோது எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. பிளஸ் 2 பரீட்சை அடுத்தடுத்து இருப்பதால் என்னால நடிக்க முடியவில்லைன்னு விலகி விட்டார் ஷோபனா. அதன்பிறகு ரேவதி கதாநாயகி ஆனார்.
கதாநாயகி ஆன ரேவதி

chitra lakshmanan
அவரும் பிளஸ் 2 தான் படிச்சிக்கிட்டு இருந்தார். படப்பிடிப்பு இடைவெளியில் அவ்வப்போது படிச்சிக்கிட்டே இருப்பார் ரேவதி என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரைக் கதாநாயகனாகக் கேட்டோம். தெலுங்கு படத்தில் நடித்து வரும் ராணாவின் அப்பா சுரேஷைக் கேட்டோம். அவரும் நடிக்க விருப்பமில்லை என்றார்.
கதாநாயகன் தேடுதல் வேட்டை
Also read: அன்னைக்கு அபர்னதி இன்னைக்கி பிரியா பவானி சங்கரா..? நயன்தாரா ரூட்டை கையில் எடுக்கும் நடிகைகள்!..
அப்புறம் படத்தில் கதாநாயகனாக நடிக்க வலைவீசி தேடினோம். மதுரையில் காலேஜ்ல போய் தேடுவோம்னு தேடினோம். ஆனால் யாருமே கிடைக்கவில்லை. கடைசியில் மீனாட்சி அம்மன் கோவிலில் போய் சாமி கும்பிட்டு வருவோம்னு போனோம். சாமி கும்பிட்டு விட்டு வரும்போது ஒரு பையன் பாரதிராஜாவைப் பார்க்கத் தவித்துக் கொண்டு இருந்தான். அப்படி கிடைத்தவர் தான் பாண்டியன்.