கமல் படமா..பயந்து கொண்டே போன கதாநாயகி – தாவணியை பிடித்து இழுத்த கமல்!

Published on: April 9, 2023
---Advertisement---

1980- 1990 களில் கமல்ஹாசன் திரைப்படம் என்றாலே கதாநாயகிகள் பயப்படுவார்கள் என்று ஒரு பேச்சு உண்டு. ஏனெனில் கதாநாயகிகளிடம் கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்கக்கூடியவர் கமல்ஹாசன். புன்னகை மன்னன் படத்திற்கு பிறகு இனி ஒரு போதும் கமலுடன் நடிக்க மாட்டேன் என நடிகை ரேகா சொன்னதாக ஒரு பேச்சு தமிழ் சினிமாவில் உண்டு.

1980 காலக்கட்டத்தில்தான் அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை ஷோபனா அடுத்து கதாநாயகியாக நடிக்க துவங்கினார். 1984 இல் ஏப்ரல் 18 என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்போது பல பெண்களுக்கு கமலுக்கு ரசிகைகளாக இருந்தனர். நடிகை ஷோபனாவும் கூட நடிகர் கமலின் பெரும் ரசிகையாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவரது இரண்டாவது படத்திற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனக்குள் ஒருவன் என்கிற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார்.

கமல் செய்த காரியம்:

இந்த செய்தியை கேட்டதும் ஷோபனாவிற்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனெனில் அப்போதுதான் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இன்னும் பெரிதாக கவர்ச்சியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. எனவே கமல் படம் குற்த்து மிகவும் பயப்பட்டார் ஷோபனா.

முதல் நாள் படப்பிடிப்பிற்கு தாவணி போட்டுக்கொண்டு வந்தார் ஷோபனா.  அப்போது கமல் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். அவரிடம் ஷோபனாவை அறிமுகப்படுத்தி வைத்தனர். ஷோபனாவை பார்த்த கமல் வேகமாக அவரது தாவணியை பிடித்து இழுத்தார்.

ஷோபனாவிற்கு அது மிகவும் அதிர்ச்சியாக போய்விட்டது. பிறகு ஷோபனாவை பார்த்து எதுக்கு இந்த தாவணி எல்லாம் என கேட்டுள்ளார். பிறகுதான் தெரிந்துள்ளது. புதிதாக வருபவர்களிடம் ஏதாவது குறும்பு செய்து பயமுறுத்துவது கமலின் வழக்கம் என்பது… அதன் பிறகு படப்பிடிப்பு நடந்த பிறகுதான் நடிகை ஷோபனா சகஜ நிலைக்கு வந்துள்ளார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கவுண்டமணியை பார்த்து பயந்தாரா கமல்?.. சீக்ரெட்டை பகிர்ந்த பிரபல நடிகர்!..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.