விஜய்க்கு ஜோடியானதும் கிளாமர் கூடிடுச்சி!.. சிக்கென காட்டி மனச இழுக்குறாரே சினேகா!..

by சிவா |   ( Updated:2024-03-29 16:56:13  )
sneha
X

sneha

தமிழ் சினிமாவில் விரும்புகிறேன் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் சினேகா. நடன இயக்குனர் கலா மாஸ்டரின் உறவினர் இவர். துபாயில் செட்டில் ஆன தமிழ் குடும்பம் இவருடையது. குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமான நடிகையாக இவர் இருந்தார்.

sneha

எனவே, அது போன்ற வேடங்களே இவரை தேடி வந்தது. ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. பாவாடை தாவணி, அல்லது புடவை அணிந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை இவர்.

sneha

கவர்ச்சி காட்ட மாட்டேன். சாவித்ரி போல, பத்மினி போல நடிப்பில் ரசிகர்களை கவர்வேன் என சொன்னவர் இவர். ரஜினியை தவிர கமல், விக்ரம், விஜய், அஜித், தனுஷ், சிம்பு என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்தார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

sneha

இவருக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார். இப்போது விஜயுடன் கோட் படத்தில் நடித்து வருகிறார். வசீகரா படத்திற்கு பின் விஜயுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது.

sneha

ஒருபக்கம், அழகான உடைகளில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், புடவையில் சிக்கென அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

sneha

Next Story