அந்த பார்வையே ஆள கொல்லுது!.. ஸ்டன்னிங் லுக்கில் மனச கெடுக்கும் சினேகா...
பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன் திரைப்படம் மூலம் கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சினேகா. தாவணி பாவாடை மற்றும் புடவை அணிந்து நடித்தே ரசிகர்களை கவர்ந்தவர்.
கவர்ச்சி காட்டி நடித்தால்தான் தமிழ் சினிமாவில் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை மாற்றி டீசண்ட்டான உடையணிந்து, டீசண்டான வேடத்தில் நடித்தாலும் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க முடியும் என நிரூபித்தவர்.
விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை இவர். நடிகர் பிரசன்னாவுடன் ஒரு படத்தில் நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.
திருமணத்திற்கு பின் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் அசத்தினார் சினேகா. தற்போது மீண்டும் கதாநாயகியாக நடிக்கும் ஆசை வந்துவிட்டதா என தெரியவில்லை.
அழகழகான உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சினேகாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.