ஓ! இதுதான் அழகுல மயங்குறதா!.. சினேகாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் நடிகை சினேகா. குடும்பபாங்கான முகத்தை கொண்டவர் என்பதால் தொடர்ந்து அதுபோன்ற வேடங்கள் அவருக்கு கிடைத்தது. லிங்குசாமியின் முதல் திரைப்படமான ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார். தமிழகத்தின் பல கிராமத்திலிருக்கும் சலூன் கடைகளில் கூட இவரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். திருமணத்திற்கு பின் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சினேகா, பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: நச்சுனு நாலு கேள்வி!.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பதில்கள்!.. காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் தங்கவேலு..
தற்போது சக நடிகைகள் போல சினேகாவும் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார்.
இந்நிலையில், புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து சினேகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.