புடவையில நீ வேற லெவல் போ!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் சினேகா...
தமிழ் சினிமாவில் நன்றாக தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் சினேகாவும் ஒருவர். சுசிகணேசன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘விரும்புகிறேன்’ திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதன் பின் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார்.
சாவித்ரி அம்மா போல், பானுமதி போல் டீசண்டான வேடத்தில் மட்டுமே நடிப்பேன் எனக்கூறி கடைசிவரை அதை கடைபிடித்தார். விஜய், அஜித், கமல், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார்.
நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணத்தில் முடிந்தது.
இதையும் படிங்க: 10 பேர்தான் வந்தாங்க… ஷோ கேன்சல்… “துணிவு” படத்துக்கு வந்த சோதனையை பாருங்க…
இரு குழந்தைகளுக்கும் அம்மாவானார். மேலும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
அதோடு, அழகழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் சினேகா, புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.