ப்ப்பா!.. பத்து வயசு குறைஞ்சி போச்சு!.. க்யூட் லுக்கில் வசீகரிக்கும் சினேகா...
துபாயில் வசித்து வந்த சினேகா சுசி கணேசன் இயக்கிய ‘விரும்புகிறேன்’ திரைப்படத்தில் நடிப்பதற்காக சென்னை வந்தவர். ஹோம்லி லுக், அழகான முகம், தேவையான நடிப்பு என ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.
தாவணி பாவாடை, புடவை மட்டும் அணிந்து குடும்ப பாங்கான கதைகளில் நடிக்க துவங்கினார். விஜய், அஜித், விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
புதுப்பேட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்தினார். நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு.
திருமணம் செய்து கொண்டபின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தற்போது அடுத்த ரவுண்டு தயாராகிவிட்டாரா என தெரியவில்லை.
விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சினேகவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.