வெட்கத்துல அத பிடிக்கும் போது மனசு எங்கேயோ போகுது...சினேகாவின் நச் க்ளிக்ஸ்....!

புன்னகை அரசி, சிரிப்பழகி என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் நடிக்க வந்ததில் இருந்து இன்று வரை அதே சிரிப்போடும் அழகோடும் தன்னை மெருகேற்றி வைத்திருக்கிறார். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு தமிழில் பட்டாசு என்ற படத்தின் மூலம் ரீ என்ரி ஆனார். அதில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். தெலுங்கிலும் பிரசாந்திற்கு ஜோடியாக ராம்சரண் படத்தில் நடித்தார்.
மேலும் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தி வந்தார். இப்பொழுது தன் பிள்ளைகள் வளர்ந்து விட்ட நிலையில் மீண்டும் சினிமாவிற்கு தன் கவனத்தை திருப்ப ஆர்வமாக இருக்கிறார்.
இந்த நிலையில் விதவிதமான போட்டோ சூட்களை நடத்தி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அழகிய பட்டுச்சேலையில் வெட்கத்துடன் மாலையை பிடித்து சிரிப்பதுமாறியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.