விஜய்க்கு ஜோடியானதும் கிளாமர் கூடிடுச்சி!.. புடவையில் சுண்டி இழுக்கும் சினேகா!..

by சிவா |
sneha
X

Actress sneha: விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சினேகா. முதல் படத்திலேயே பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தாலும் லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

sneha

இந்த படத்தில் இடம் பெற்ற ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் அவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது. அதன்பின் விஜய், விக்ரம், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வசூலை பெறவே இவரை தேடி தயாரிப்பாளர்கள் வந்தார்கள்.

sneha

விஜயுடன் வசீகரா படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக சில படங்களில் நடித்தார். இருவருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர். திடீரென நடிகர் பிரசன்னாவை சினேகா திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகளும் உண்டு. திருமணத்திற்கு பின் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

sneha

அதன்பின் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அண்ணி, அக்கா, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். இந்நிலையில்தான், வெங்கட்பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. எனவே, தற்போது அந்த படத்தில் நடித்து வருகிறார்.

sneha

அவ்வப்போது, தனது அழகை விதவிதமான உடைகளில் காட்டி புகைப்படங்களையும் சினேகா வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புடவையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சினேகா.

sneha

Next Story