வேணாம் செல்லம்!..இப்படி பாத்தா வேலை ஓடாது!...சினேகாவின் க்யூட் கிளிக்ஸ்....
கோலிவுட்டில் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா எனில் புன்னகை இளவரசி பட்டம் சினேகாவுக்குதான் கிடைத்தது. ஏனெனில், சிரித்து சிரித்தே இவர் ரசிகர்களை வளைத்தவர். ஒரு காலத்தில் டீக்கடை, சலூன் ஆகியவற்றில் இவரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
விரும்புகிறேன் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். விஜய்,அஜித், கமல், சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஆசைப்பட்டாலும் நடக்க மாட்டுங்குதே!…ரூட்ட மாத்தி ஹிட் அடித்த டாப் பிரபலங்கள் இவர்கள்தான்…
தமிழ் சினிமா மட்டுமில்லை. தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் சினேகா. 15 வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாக நடித்து வந்த சினேகா தற்போது அண்ணி, அம்மா என குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தன்னுடையை க்யூட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தும் வருறார்.
இந்நிலையில், சுடிதாரில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.