Categories: Cinema History Cinema News latest news

எம்ஜிஆர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை! விஷயம் அறிந்து சின்னவர் செய்த மாபெரும் செயல்

Actor MGR :  முன்னனி நடிகைகளிடம் பெரும்பாலும் கேட்கப்படும் கேள்விகளாக அடுத்து எந்த முன்னனி ஹீரோக்களுடன் நடிக்க இருக்கிறீர்கள் ? என்றுதான். ஏனெனில் சினிமாவில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து  நடித்தால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளின் மார்கெட்டும் தானாகவே உயர்ந்து விடும்.

அது இன்றைய காலகட்டத்தில் மட்டுமில்லாமல் அன்றைய சினிமாவிலும் இருந்து வந்தது. அந்த வகையில் எம்ஜிஆருடன் ஒரு படத்தில் நடித்து திடீரென அந்தப் படத்தில் இருந்து எந்தக் காரணமும் இல்லாமல் நீக்கப்பட்டிருக்கிறார் நடிகை சௌகார் ஜானகி.

இதையும் படிங்க: வாடிவாசலில் எந்த மாற்றமும் இல்ல.. அந்த கதை அவருக்கு தான்.. ஷூட்டிங் குறித்த அப்டேட்டை சொன்ன வெற்றிமாறன்..!

மாடப்புறா படத்தில் தான் முதன் முதலில் சௌகார் ஜானகி எம்ஜிஆருடன் நடித்தாராம். ஆனால் என்னக் காரணம் என தெரியவில்லையாம். திடீரென அந்தப் படத்தில் இருந்து சௌகார் ஜானகியை நீக்கியிருக்கிறார்கள்.

இதனால் சௌகார் ஜானகி மிகவும் வருத்தமுற்று இருந்தாராம். இந்த விஷயம் எம்ஜிஆர் காதுக்கு செல்ல அதிலிருந்து பெற்றால்தான் பிள்ளையா, தாய்க்கு தலைமகன், ஒளிவிளக்கு, பணம் படைத்தவன்
போன்ற படங்களில் எம்ஜிஆருடன் நடிக்க வாய்ப்பை கொடுத்தாராம் எம்ஜிஆர்.

இதையும் படிங்க: மசாலா ஹீரோன்னு யார் சொன்னா!?.. எந்த ஹீரோவும் செய்யாததை அப்போதே செய்த ரஜினி..

அஒரு அண்ணனுக்கும் மேலாக அதிக அன்பை பொழியக் கூடியவர் எம்ஜிஆர் என சமீபத்தில் சௌகார் ஜானகி எம்ஜிஆரை பற்றி கூறியிருக்கிறார். பொதுவாக அந்தக் கால நடிகைகளில் சௌஜார் ஜானகி மிகவும் படித்தவர். ஆங்கிலத்தை சரளமாக உச்சரித்து பேசுவதில் வல்லவர்.

 

Published by
Rohini