Connect with us
mgr

Cinema History

ஜெயலலிதாதான் ஃபர்ஸ்ட்!.. எம்.ஜி.ஆர் செய்த வேலை!. கோபத்தில் வெளியேறிய நடிகை!…

வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ஜெயலலிதாவுக்கு சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி முக்கிய ஆளுமையாக மாறிப்போனவர் எம்.ஜி.ஆர். வெண்ணிற ஆடை படத்திற்கு பின் ஜெயலலிதா நடித்த இரண்டாவது படத்திலேயே எம்.ஜி.ஆர்தான் ஹீரோ.

அப்படி அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஜெயலலிதாவை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா ஜோடி திரையில் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதனால்தான், சரோஜாதேவிக்கு பின் தன்னுடைய பல படங்களில் ஜெயலலிதாவை ஜோடியாக நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!…

ஆனால், ஜெயலலிதாவின் நடவடிக்கை பிடிக்காத சிலர் அவரை பற்றி எம்.ஜி.ஆரிடம் வேறு மாதிரி போட்டு கொடுக்க அவரை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கினார் எம்.ஜி.ஆர். அதோடு தனது படங்களிலும் ஜெயலலிதாவை நடிக்க வைக்கவில்லை. உலகம் சுற்றும் வாலிபன் படத்திலேயே ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது.

ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. இதனால், கோபமடைந்த ஜெயலலிதா சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட மற்ற நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். இது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவரால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனாலும், ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவை தனது அரசியல் கட்சியில் இணைத்து வளர்த்துவிட்டார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதற்கு இந்த சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

ஜெயலலிதாவிடம் எம்.ஜி.ஆருக்கு பிடித்தவர் அவரின் ஆங்கில திறமை. அதனால்தான் அவரை பாராளுமன்றத்தில் பேச எம்.பி.ஆக்கினார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தமிழ் சினிமாவின் பொன்விழாவின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அப்போதைய ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாணியில் கதை சொல்லி ராமராஜனை சம்மதிக்க வைத்த பிரபலம்!.. அட அந்த படமா?!…

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகை சவுகார் ஜானகியும், ஜெயலலிதாவும் நியமிக்கப்பட்டார்கள். சவுகார் ஜானகி ஆங்கிலதில் அதிக புலமை கொண்டவர். எனவே, அவர் முதலில் நிகழ்ச்சியை நடத்துவார் எனவும், அவருக்கு பின் ஜெயலலிதா தொகுத்து வழங்குவார் எனவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒத்திகையும் நடந்தது.

sowkar

ஆனால், நான்தான் முதலில் பேசுவேன் என ஜெயலலிதா அடம்பிடித்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை. இது தொடர்பாக சவுகார் ஜானகிக்கும், அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நிகழ்ச்சி நடந்தபோது ஜெயலலிதாவே முதலில் பேச துவங்கினார். இதை சற்றும் எதிர்பார்க்காத சவுகார் ஜானகி ஜெயலலிதாவை முறைத்து பார்த்தார். அப்போது அவரை பார்த்து ஜெயலலிதா நக்கலாக சிரித்தார். இதில் கோபமடைந்த சவுகார் ஜானகி கோபத்துடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். ஜெயலலிதா முதலில் பேசியதற்கு பின்னால் இருந்தவர் எம்.ஜி.ஆர் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.

google news
Continue Reading

More in Cinema History

To Top