எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? விஜயகாந்த் மேல கடும் கோபம் கொண்ட நடிகை…!

vijayakanth, srilekha
பிரபல குணச்சித்திர நடிகை ஸ்ரீலேகா ராமச்சந்திரன் விஜயகாந்த் பற்றி சில நினைவுக்குறிப்புகளைப் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் மேல பயங்கர கோபமா இருந்தேன். வாய்ப்பு கொடுக்குறதனால இல்ல. எங்க அப்பா தூர்தர்ஷனுக்குப் போயிட்டு வரும்போது ஒரு விபத்து. அதுல தான் இறந்துட்டாரு. விஜயகாந்த் படம் நல்லா ஓடணும்னு திருப்பதிக்குப் போய் லட்டு வாங்கி வந்து கொடுப்பாரு. அவ்ளோ பாசம். ஆனா அப்பா இறந்ததுக்கு இவரு வரல. பேமிலியா பழகியும் வரலன்னு ரொம்ப வருத்தமா இருந்தது.
கங்கை அமரனின் பொழுது விடிஞ்சாச்சு படம். அதே போல இன்னொரு படம் வெள்ளைப் புறா ஒன்று. அந்தப் படத்தில் ஜூனியர் விஜயகாந்த் கேரக்டருக்கு அம்மா ரோல் பண்ணினேன். அதுல டப்பிங் ஏவிஎம் கார்டன்ல நடக்குது. துரை சார் தான் என்ஜினீயர். என்னைக் கூப்பிட்டாங்க. நான் போனேன். விஜயகாந்த் என்னைப் பார்த்ததும் அப்படியே நின்னுட்டாரு. நானும் நின்னுட்டேன்.
பல வருடங்களுக்குப் பிறகு அப்ப தான் சந்திக்கிறேன். என்னைப் பார்த்ததும் விஜயகாந்துக்கு டப்பிங் ரீடேக் ஆகிட்டே இருக்கு. அப்புறம் துரை சார் எல்லாரையும் வெளியனுப்பி விட்டார். நான் மட்டும் உட்கார்ந்து இருந்தேன். மறுபடியும் பேச ஆரம்பிச்சாரு. கரண்ட் போயிடுச்சு. அப்புறம் எங்கிட்ட வந்து உட்கார்ந்துட்டாரு. 'எதுக்கு எங்கிட்ட பேச மாட்டேங்குற?'ன்னு கேட்டாரு.
'நீங்க வாய்ப்பு கொடுக்கலங்கறது எனக்குத் தேவையில்லை. உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு சாரி கேட்குறீங்க?'ன்னு கேட்டேன். உன் கோபம் எனக்குப் புரியுதுன்னாரு. எங்க அப்பா எவ்ளோ பாசமா இருந்தாரு. நீங்க உடனே வரலன்னா கூட பரவாயில்லை. ஒரு வருஷம், 2 வருஷம் கழிச்சிக்கூட வந்துருக்கலாமேன்னு கேட்டேன். உண்மை தான். அது என் தப்புதான்னு சொன்னாரு.
எங்க அக்கா வீட்டுக்காரர் இறந்துட்டாரு. அப்புறம் சூட்டிங்னு பிசியா இருந்தேன்னு அப்போ விஜயகாந்த் சார் சொன்னாரு. அவரைப் பொருத்தவரை நான் அவரிடம் வாய்ப்பு கேட்டுருந்தா கண்டிப்பாக் கொடுத்துருப்பாரு. ஆனா கேட்காம இருந்துட்டேன். மற்றபடி அவரு எம்ஜிஆருக்கு அப்புறம் உதவுறதுல தங்கமான மனசுக்காரர் என்கிறார் ஸ்ரீலேகா ராஜேந்திரன். அவரது கணவரைக் கூட மலேசியா கலைநிகழ்ச்சிக்கு விஜயகாந்த் தான் அழைத்துச் சென்றார் என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.