Biggboss Tamil 7
இப்படி ஒரு வார்த்தை வாழ்க்கையையே அழிச்சிரும்! நிக்ஷனை கடுமையாக விமர்சித்த முன்னணி நடிகை
Nixen: 9 வாரங்களை கடந்து மக்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது பிக்பாஸின் ஏழாவது சீசன். இந்த சீசனில் மொத்தம் 18போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து கானாபாலா, ஐஸு,அன்னபாரதி, பிரதீப், ஜோவிகா, ஆகியோர் வெளியேறியிருக்கின்றனர். மீதமுள்ள போட்டியாளர்கள் கடுமையாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். சமீப வாரங்களில் பூனையும் எலியுமாக இருந்த அர்ச்சனா, விஷ்ணு இருவரும் கைகோர்த்து மற்ற போட்டியாளர்களை பந்தாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீங்களாம் பெரிய ஒழுங்கு.. சண்டை போட்டா தப்பா..? சிறகடிக்க ஆசையில் இந்த கொலைவெறி தேவையா..?
இதனால் இவர்கள் இருவர் மீதும் மற்ற போட்டியாளர்கள் கடுமையான கோபத்துடன் இருக்கின்றனர். இதில் உச்சக்கட்டமாக சக போட்டியாளரான நிக்ஷன் அதிகமாகவே அர்ச்சனா மீது பயங்கர கொலை வெறியில் இருக்கிறார்.
அதற்கேற்றாற்போல் தகாத வார்த்தைகளால் பேசி பார்க்கும் ரசிகர்களையும் நடுங்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் நிக்ஷன் பேசியது குறித்து பிரபல 80ஸ் முன்னணி நடிகையான ஸ்ரீபிரியா கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 1960 காலகட்டத்தில் ஜாலியா டூர் போகணுமா!. அப்படின்னா இந்தப் படத்தைப் பாருங்க…
அவர் தனது X தள பக்கத்தில் கூறியதாவது: ‘ நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா…’ என குறிப்பிட்டிருக்கிறார்.
நிக்ஷன் இந்த மாதிரி வார்த்தைகளை பேசியிருந்தாலும் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு மற்ற போட்டியாளர்கள் சிலரும் மோசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்தமுள்ள ஜோக்குகளையும் பேசிக் கொண்டுதான் வருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளித்திரையில் வெற்றிக்கண்ட பிக் பாஸ் ஹீரோக்கள்!.. எல்லாமே தரமான சக்சஸ் தானுங்க!..
ஒவ்வொரு வார கமல் எபிசோடிலும் இதைப் பற்றி என்னதான் கமல் அறிவுரைகளை கூறினாலும் யாரும் அதை கேட்கிற மாதிரி தெரியவில்லை. ஒரு எபிசோடில் நிக்ஷன் கூட விதிமுறைகளை மீறும் போட்டியாளர்களை பிக்பாஸ் கடுமையாக தண்டிக்க வேண்டும் என கூறியிருப்பார்.
உண்மையிலேயே அப்படி செய்தால்தான் இதற்கு ஒரு விடை கிடைக்கும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.