டாப் நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? பாத்ரூம் வசதியே இல்லாத அறை.. என்ன செய்தார் தெரியுமா?

by Rohini |
sujatha
X

sujatha

Actress Sujatha: 70, 80களில் ஒரு டாப் நடிகையாக இருந்தவர் நடிகை சுஜாதா. அந்தக் காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என எல்லா மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுஜாதா ‘போலீஸ் ஸ்டேஷன்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின் 1972 ஆம் ஆண்டு கே.பாலசந்தரால் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார் சுஜாதா. முதல் படமே சுஜாதாவுக்கு பெரிய புகழைப் பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தின் வெற்றி சுஜாதாவை தமிழ் சினிமாவில் இன்னும் பிரபலப்படுத்தியது.

இதையும் படிங்க: 16 வயதினிலே டயலாக்கை நினைவுபடுத்திய மாரிசெல்வராஜ்… செம ஃபன்னியா இருக்கே!

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் சுஜாதா. மேலும் அவர் மொத்தமாக 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரத்குமார், ரஜினி போன்ற பெரிய பெரிய நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். வரலாறு படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடித்திருந்தார் சுஜாதா. அதுதான் சுஜாதா நடித்த கடைசி படமாக அமைந்தது. சினிமா உலகில் கொடி கட்டி பறந்தாலும் சுஜாதாவின் சொந்த வாழ்க்கை என்பது மிகவும் கடினமாக அமைந்தது.

ஒரு கட்டத்திற்கு மேலாக சுஜாதா பொது இடங்களில் வருவதை தவிர்த்து வந்தார். அவரை பார்க்கவும் அவரது வீட்டார் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சுஜாதா எப்படிப்பட்ட ஒரு மனம் படைத்தவர் என்பதற்கு ஒரு உதாரணமான சம்பவத்தை சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: வசூலை வாரிக்குவிக்கும் வாழை… 3 நாளில் இத்தனை கோடியா?…

சிவாஜியுடன் ‘அந்தமான் காதலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக சுஜாதா அந்தமானுக்கு சென்றிருந்தாராம். அங்கு அப்போதைய காலகட்டத்தில் பெரிய ஹோட்டல்கள் எல்லாம் இல்லையாம். அதனால் இருப்பதிலேயே சுமாரான ஒரு ஹோட்டலில் நான்கு அறைகள் புக் பண்ணியிருந்தாராம் தயாரிப்பாளர். அதில் ஒரு அறை சிவாஜிக்கு இன்னொரு அறை சுஜாதாவுக்கு என்று இருந்ததாம்.

தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சுஜாதா செல்ல அங்கு வேறு யாரோ இருக்க இன்னொரு அறையில் தங்கினாராம் சுஜாதா. ஆனால் அந்த அறையில் பாத்ரூமே கிடையாதாம். இதை தயாரிப்பாளர் வந்து பார்க்க ஹோட்டல் உரிமையாளரை வந்து சத்தம் போட்டிருக்கிறார். அதற்கு சுஜாதா ‘ நாம் இருக்கப் போறதே ஒரு பத்து நாள்கள்தான். நான் சமாளித்துக் கொள்கிறேன். சத்தம் போடவேண்டாம்’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: எல்லா அரசியல்வாதிகளையும் சாடிய ரஜினி படம்! கலைஞர் பார்த்து சொன்ன ஒரு வார்த்தை

குளிப்பதற்கு மினரல் வாட்டர்தான் வேண்டும் என கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஒரு டாப் நடிகையாக இருந்தும் இப்படி ஒரு குணம் படைத்தவர் சுஜாதா எனும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

Next Story